தக்லைஃப் பட தோல்வி எதிரொலி: மணிரத்னம் அப்படித்தான் ஏமாத்துறாரோ?

By :  SANKARAN
Published On 2025-06-08 08:06 IST   |   Updated On 2025-06-08 08:06:00 IST

மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படம். கமல், சிம்பு நடித்தது. ஏ.ஆர்.ரகுமான் இசை. இப்படி எல்லாருமே பெரிய ஜாம்பவான்கள். இருந்தும் படத்தை விமர்சகர்கள் கிழித்துத் தொங்க விடுகிறார்கள். மீம்ஸ்கள், ட்ரோல்கள் என வைரலாகி வருகிறது. ஏன் என்ற கேள்வி எழலாம். இதுசம்பந்தமாக ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பதில் சொல்லி இருக்கிறார். என்ன விவரம்னு பாருங்க.

தக் லைஃப் படத்தைப் பார்த்துட்டீங்களா? ராவணன் படத்துல இருந்தே மணிரத்னம் தன்னோட டெக்னிக்கல் பிரில்லியண்ட்ஸ் மற்றும் மல்டிஸ்டார் காஸ்டிங்கை வச்சித்தான் மணிரத்னம் ஏமாத்துறாரோன்னு தோணுது. இதைப் பற்றி உங்க கருத்து என்னன்னு ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இப்படி பதில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக இப்போது திரைப்படத்தைப் பார்க்கின்ற ரசிகர்களின் மனப்போக்கு, ஊடகங்களின் மனப்போக்கு எல்லாமே கொஞ்சம் மாறுதல் அடைந்து இருப்பதாக பார்க்கிறேன். முன்பும் இதுபோன்று பல தோல்விப்படங்கள் வந்துள்ளன. பல மோசமான படங்களும் வந்துள்ளன. ஆனால் அவை எல்லாம் இந்தளவுக்கு விமர்சனத்துக்கு ஆளானதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.


5 வெள்ளிவிழாப் படங்களை ஒரு காலகட்டத்தில் கொடுத்த பாரதிராஜாதான் வாலிபவே வா வா என்ற படத்தையும் கொடுத்தார். ஆனால் அந்தப் படம் உருவானபோது கூட இப்ப எல்லாரும் பெரிய இயக்குனர்களைத் தாறுமாறாகக் கிழி கிழின்னு கிழித்துத் தொங்கவிடல. ஓரளவு கண்ணியமாகத்தான் அந்தப் படத்துக்கு விமர்சனம் செய்தனர்.

திரைவாழ்க்கையில் தொடர்ந்து வெற்றிப்படங்களாகக் கொடுப்பது என்பது சாத்தியமல்ல. ஒரு காலகட்டத்தில் படங்கள் தோல்வி அடையத்தான் செய்யும். அந்தப் படம் தோல்வின்னு சொல்லலாம். அந்தப் படத்தில் உள்ள குறைகளைச் சொல்லலாம். ஆனால் இந்த அளவுக்கு அவர்களை விமர்சனம் செய்து கேலி செய்ய வேண்டுமா என்ற எண்ணம் எனக்குள்ளே இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News