வேட்டையன் படக்குழு செய்தது புத்திசாலித்தனமா தெரியல... பிரபலம் தகவல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கி விரைவில் வெளிவர உள்ள படம் வேட்டையன். சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமிதாப்பச்சன் கைகோர்க்கிறார். இந்தப் படத்தில் பகத்பாசில், மஞ்சுவாரியர், ராணா டகுபதி உள்பட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

என்கவுண்டரை மையமாகக் கொண்ட உண்மைக் கதையைப் படமாக எடுத்திருக்கிறார்கள். த.செ.ஞானவேல் ஆரம்பத்தில் இந்தக் கதையை சொல்ல வரும்போது ரஜினி சிறிது மசாலா கலந்தால் நல்லாருக்கும். அப்படி மாத்திட்டு வாங்கன்னு சொன்னாராம். அப்புறம் மசாலா கலந்து கொண்டு வந்த கதை தான் வேட்டையன்.

இந்தப் படத்துல லோகேஷ், நெல்சன் மாதிரி என்னால கமர்ஷியலைக் கொடுக்க முடியாது. என்னோட பாணியில கொடுக்குறேன்னு சொன்னாராம் ஞானவேல். அதுவும் சிறப்பாகவே வந்திருப்பதாகச் சொல்றாங்க. இவர் ஏற்கனவே சூர்யாவை வைத்து ஜெய்பீம் என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தப் படத்தைப் பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். வாசகர் ஒருவர் அமிதாப்பச்சனுக்கு வாய்ஸை ஏன் நிழல்கள் ரவி கொடுக்கலன்னு கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். அமிதாப்பச்சன் வாய்ஸ்சை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக பிரகாஷ் ராஜ் குரலை எடுத்து பொருந்திப் போற மாதிரி அழகா அமைச்சிருக்காங்க.

ஆனா என்னைப் பொருத்த வரைக்கும் நிழல்கள் ரவியோட குரல் அமிதாப்பச்சனுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும். அமிதாப்பச்சனுக்கு நிழல்கள் ரவியோட குரல் மாதிரி வேறு யாருடைய குரலும் பொருந்தாது.வேட்டையன் படத்தைப் பொருத்தவரைக்கும் அமிதாப்பச்சனுக்குக் குரல் கொடுக்க நிழல்கள் ரவியைத் தவிர்த்தது அந்தப் படக்குழு செய்த புத்திசாலித்தனமான காரியமாக எனக்குத் தெரியலை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


நிழல்கள் ரவி நிறைய படங்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். ஹாலிவுட் படங்களுக்குக் கூட இவர் கொடுக்கும் வாய்ஸ் மிரட்டலாக இருக்கும். இவருடைய பிளஸ் பாயிண்டே இவரது வாய்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையில் பாடல்கள் அற்புதம். அதிலும் மலையாள வாடை வீச வந்துள்ள மனசிலாயோ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் திரைக்கு வருகிறார்.

Related Articles
Next Story
Share it