VidaaMuyarchi: விடாமுயற்சி முதல் சிங்கிள் Sawadeeka… சண்டைக்கு நடுவில் அப்டேட் விட்டு சிக்கிய படக்குழு…
சண்டைக்கு நடுவில் விடாமுயற்சியின் அப்டேட்
VidaaMuyarchi:: அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட்டை நிறுவனம் வெளியிட்டு இருக்கும் நிலையில், தற்போது அதுவும் சிக்கலாக மாறியிருக்கிறது.
துணிவு திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிக நீண்ட காலமாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. ஒவ்வொரு அப்டேட்டிற்கும் காத்திருந்த ரசிகர்கள் படத்தின் வெளியீடு குறித்து பல நாட்களாக எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் கடைசி கட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தொடர்ச்சியாக அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. இப்படம் காலதாமதம் ஆனதால் தற்போது நடிகர் அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
முதலில் இந்த திரைப்படம் தான் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியிட இருப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது விடாமுயற்சி அந்த நாளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் தற்போது இப்படத்தின் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவானது.
அதை ஈடு கட்டும் வகையில் படத்தின் முதல் பாடலான சுவாதிகா வரும் டிசம்பர் 27ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கொண்டாடும் நிலையில் அஜீத் ரசிகர்கள் தற்போது இல்லை என்பது தான் உண்மை.
காலையில் இருந்து நடிகர் விஜய்யை கலாய்க்கும் விதமாக, அஜித் ரசிகர்கள் விஜய் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் ஹேஸ்டேக் ஒன்றை உருவாக்கி கலாய்த்து வந்தனர். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் தற்போது அஜித் குறித்து அதேபோன்று ஹேஸ்டேக்கை உருவாக்கி விமர்சித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் இந்த அப்டேட் வெளியாகியிருக்கும் நிலையில் தற்போது இதுவும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த சண்டை சில நாட்களாக இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் இருதரப்பும் சண்டை இட்டுக் கொள்வது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
Also Read: விநியோகஸ்தர்களின் நஷ்டத்தை நான் ஏன் சரி செய்றேன்னு தெரியுமா? விஜயகாந்தோட பெரிய மனசைப் பாருங்க..!