எல்லா மொழியிலும் அடிச்சு நொறுக்கும் எஸ்.ஜே.சூர்யா.. இருந்தாலும் இவ்ளோ டெடிக்கேஷனா?..

By :  Ramya
Update: 2024-12-25 13:59 GMT

sj suriya

எஸ்.ஜே.சூர்யா: தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் எஸ் ஜே சூர்யா. அதன் பிறகு அஜித் கொடுத்த வாய்ப்பு மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் பல மொழிகளில் பட்டையை கிளப்பி வருகின்றார். நடிப்பு அரக்கன் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகச் சிறந்த நடிகராக உருவெடுத்து இருக்கின்றார் எஸ் ஜே சூர்யா.

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆவதற்கு முன்னதாகவே பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த எஸ் ஜே சூர்யா 2004 ஆம் ஆண்டு வெளிவந்த நியூ என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ச்சியாக பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டுக்கொடுத்த ஸ்பைடர் என்கின்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் வில்லனாக நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. தமிழில் மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கின்றார். வில்லனாக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் தனது மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது இந்தியா முழுவதும் பேமஸாக இருந்து வருகின்றார்.

தமிழ் மொழி மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படு பிஸியாக நடித்து வருகின்றார். இவர் கடைசியாக தமிழில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தியன் 2 திரைப்படத்தை காட்டிலும் இந்தியன் 3 திரைப்படத்தில் தான் எஸ் ஜே சூர்யாவுக்கு அதிக காட்சிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மீண்டும் தெலுங்கில் கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

அந்த திரைப்படத்தில் ராம்சரணுக்கு வில்லனாக நடித்திருக்கின்றார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்த நிலையில் அதில் பார்ப்பதற்கு அப்படியே தெலுங்கு நடிகர் போலவே காட்சியளித்தார் எஸ் ஜே சூர்யா. மேலும் தமிழில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வீர தீர சூரன் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கின்றார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருக்கும் எஸ் ஜே சூர்யா பேன் இந்தியா திரைப்படங்களில் நடித்து வருவதால் டப்பிங் தானே செய்வதாக கூறியிருக்கின்றாராம். ஏனென்றால் இவரின் குரல் மற்ற நடிகர்களை ஒப்பிடும்போது சற்று வித்தியாசமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இவரது குரலை வேறு யாராவது பேசினாலும் அது அவ்வளவாக நன்றாக இருக்காது.


இதனால் எஸ் ஜே சூர்யா எல்லா மொழிகளிலும் தான் டப்பிங் பேசுவேன் என்று கூறி வருகிறாராம். ஒருவேளை அந்த மொழி தெரியவில்லை என்றால் கூட அதனை கற்றுக் கொள்வதற்கும் ரெடியாக இருக்கின்றாராம் எஸ் ஜே சூர்யா. அதேபோல்தான் தற்போது பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு அனைத்து மொழிகளுக்கும் தானே டப்பிங் பேசியிருக்கின்றாராம்.

இந்திய சினிமாவிலேயே பிரகாஷ்ராஜ் தான் அனைத்து மொழிகளுக்கும் டப்பிங் பேசக்கூடிய ஒரு வில்லன் நடிகர். அதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அதேபோல் டெடிகேஷனாக இருந்து வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் 5 மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களின் வாய்ப்பு குவிந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

Tags:    

Similar News