அந்த விஷயத்தில் கருத்து சொல்ல துப்பில்லை!.. ஒருவேளை கேரளால அதிக ரசிகர்கள் இருக்கிறதாலயா?..
நடிகர் விஜய்: தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவர் நடிகர் விஜய். தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் விஜய் திடீரென்று சினிமாவிலிருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக கூறியிருந்தார். இது அவரின் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கிய விஜய் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஒரு பக்கம் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அரசியல் வேலைகளிலும் மிக கவனமாக இருந்து வருகின்றார் நடிகர் விஜய். அரசியல் தொடர்பான அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து வருகின்றார்.
கடைசி திரைப்படம்:
நடிகர் விஜய் தற்போது தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை ஹச் வினோத் இயக்கி வருகின்றார். மேலும் கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகின்றது. படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த வருடம் இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தொடங்கும் என்று கூறப்படுகின்றது. படத்தில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து பூஜா ஹெக்டே நடித்து வருகின்றார்.
சங்கமித்ரா சந்திப்பு:
பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் பேத்தியும், அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகளும் சங்கமித்ரா தற்போது அலங்கு என்கின்ற திரைப்படத்தை தயாரித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்தார். தற்போது நடிகர் விஜயை சந்தித்து இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் போட்டுக்காட்டி இருக்கிறார்கள்.
மேலும் அவரிடம் வாழ்த்துக்களை பெற்றிருக்கிறார்கள். இந்த திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படம் தமிழக மற்றும் கேரள எல்லையில் நடைபெற்ற உண்மையான சம்பவத்தை மையமாக இயக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் ஒரு நாய்க்கும் மனிதனுக்கும் இடையேயான எமோஷனல் கதையை எடுத்து கூறும் திரைப்படமாக அலங்கு திரைப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகின்றது.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:
கேரள மாநிலத்தில் இருந்து வரும் மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டி வருவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றது. அங்கு இருந்து வரும் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதற்கு தமிழகம் என குப்பைத் தொட்டியா என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இந்த விஷயம் தொடர்பாக நடிகர் விஜய் இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அலங்கு பட குழுவினர் விஜயை சந்தித்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் கேரள மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து எந்த கருத்தும் சொல்லவில்லை. ஒருவேளை தங்களுக்கு கேரளாத்தில் அதிக ரசிகர்கள் இருப்பதால் அடுத்து வரவுள்ள படத்திற்கு பிரச்சனை வரக்கூடும் என்பதால் எந்த கருத்தும் சொல்லாமல் இருக்கிறாரா? என்று பதிவிட்டு இருக்கின்றார்.