விடாமுயற்சி படத்தின் மொத்த பட்ஜெட்.. எவ்வளவு நஷ்டம்னு பாருங்க! இந்த லிஸ்ட் போதுமா?

By :  Rohini
Update:2025-03-03 17:07 IST

மொத்த பட்ஜெட்: விடாமுயற்சி திரைப்படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இப்போது வெளியாகி இருக்கிறது. கடந்த மாதம் ஆறாம் தேதி அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விடா முயற்சி. மகிழ் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளிவந்த திரைப்படம். முதலில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். படத்தில் உள்ள நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீசியன்கள் இவர்களின் சம்பளம் 140 கோடி, தயாரிப்புக்கான செலவு 60 கோடி, வட்டி 20 கோடி, அஜித் சம்பளத்திற்கான வட்டி 50 கோடி, படத்தை புரொமோட் செய்வதற்காக 5 கோடி, விபிஎஃப்க்கான செலவு ஐந்து கோடி என மொத்தமாக படத்தின் பட்ஜெட் 280 கோடி.

நடிகர்களுக்கான சம்பளம்: இதில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீசியன்களுக்கான சம்பளம் 140 கோடி என பார்த்தோம். இதில் யார் யாருக்கு எத்தனை கோடி சம்பளம் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதில் அஜித்துக்கு 105 கோடி சம்பளமும் த்ரிஷாவுக்கு 4கோடி, அர்ஜுனனுக்கு 7கோடி, ரெஜினாக்கு 50 லட்சம், இயக்குனரான மகிழ் திருமேனிக்கு 5 கோடி, இசையமைப்பாளர் அனிருத்துக்கு 13 கோடி, படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாசுக்கு மூன்று கோடி, மத்த ஆர்டிஸ்ட் மற்றும் டெக்னீசியன்களுக்கு 2.5 கோடி என மொத்தமாக 140 கோடி வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வருமானம் இல்லை: அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் பிசினஸ் பற்றிய தகவல் இருக்கிறது. இதில் சில ஏரியாக்கள் தவிர பெரும்பாலான ஏரியாக்களில் லைக்காதான் சொந்தமாக ரிலீஸ் செய்திருக்கிறது. அதனால் ரிலீஸுக்கு முன்பாகவே தியேட்டரிக்கல் அடிப்படையில் லைக்காவிற்கு பெரிய வருமானமாக எதுவும் வரவில்லை. பல மாநிலங்களில் டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் கொடுத்ததனால் அது மட்டுமே தான் ரெவன்யூவாக வந்திருக்கிறது. கேரளாவை பொறுத்த வரைக்கும் கோகுலம் மூவிஸ் மூலமாக விடாமுயற்சி படத்தை லைக்காவே சொந்தமாக ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

தியேட்டரிக்கல் பிஸினஸ்: அதனடிப்படையில் கேரளா தியேட்டரிக்கள் மூலமாக லைக்காவிற்கு அட்வான்ஸ் ஆக கிடைத்த தொகை 10 கோடி. அதன் பிறகு ஆந்திரா மற்றும் தெலுங்கானா இங்கேயும் லைக்காதான் சொந்தமாக ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அதிலும் இவர்களுக்கு அட்வான்ஸ் ஆக 10 கோடி கிடைத்திருக்கிறது. அதன் பிறகு கர்நாடகா தியேட்டரிக்கல் உரிமையாக ஒரு நிறுவனம் ஆறு கோடிக்கு வாங்கி இருந்தார்கள். அதன் பிறகு ஹிந்தியில் தியேட்டரிக்கல் மற்றும் சேட்டிலைட் உரிமையாக 15 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது .அதன் பிறகு விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனம் 70 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது.

முன்னதாக 2022ல் netflix நிறுவனத்திற்கும் லைக்காவிற்கும் இடையே ஒரு டீலிங் நடந்தது .என்னவெனில் விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் 70 கோடி, சந்திரமுகி 2 படத்தின் டிஜிட்டல் 25 கோடி, நாய் சேகர் படத்தின் டிஜிட்டல் 10 கோடி, அதன்பிறகு சின்ன சின்ன படங்களுக்கு டிஜிட்டல் உரிமையாக 20கோடி என கிட்டத்தட்ட 125 கோடி லைக்காவிற்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கும் ஒரு டீலிங் நடந்திருக்கிறது .

அதன் பிறகு இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் நிறுவனம் 30 கோடிக்கும் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் 15 கோடிக்கும் வாங்கி இருக்கிறது .அதனால் விடாமுயற்சி படத்தின் ரிலீஸுக்கு முன்பு பார்த்தோம் என்றால் இந்த படத்தின் வியாபாரம் என்பது 156 கோடி. அதனால் பட்ஜெட் 280 கோடி, ரிலீசுக்கு முன்பு இதனுடைய மொத்த பிஸ்னஸ் 156 கோடி ஆக மொத்தம் படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே லைக்காவிற்கு 124 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News