முதல்ல பிரஸ சந்திக்க சொல்லுங்க.. விஜய் பற்றிய கேள்விக்கு கடுப்பான விஷால்

By :  Rohini
Update:2025-03-03 21:22 IST

விஜய் கட்சியை தொடங்கி ஓர் ஆண்டுக்கும் மேலாக ஆகிறது. தனது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என அவ்வப்போது பனையூர் அலுவலகத்தில் கூட்டத்தை கூட்டி அவர்களுக்கான உந்துதலை கொடுத்துக் கொண்டே வருகிறார் விஜய். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை தன்னுடைய கட்சி நிர்வாகிகள் சாதுர்யமாக மிகவும் தைரியத்துடனும் எதிர் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாகவும் இருக்கிறார்.

அதற்காக இப்போதிலிருந்து தனது அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கொடுத்துக் கொண்டு வருகிறார் விஜய். அவ்வப்போது ஆளும் கட்சி மற்றும் மத்தியில் ஆளும் கட்சி என இவர்களுக்கு எதிரான கருத்துக்களையும் பரப்பி வருகிறார். இதுவரை பத்திரிகையாளர்களையே சந்திக்காத விஜய் எப்போது அவர்களை சந்தித்து பேச போகிறார் என்பதைப் பற்றி தான் பலரும் பேசி வருகிறார்கள்.

கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆன நிலையிலும் இன்னும் பத்திரிகையாளர்களை அவர் சந்திக்காதது தான் பெரிய அதிருப்தியாக இருக்கிறது. அதை கடுமையாக ஒரு சில பேர் விமர்சித்தும் வருகிறார்கள். எப்பொழுது பத்திரிகையாளரை சந்திக்கிறாரோ அன்று ஏகப்பட்ட கேள்விகள் அவர் முன் வைக்கப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த அளவுக்கு பத்திரிக்கையாளர்களிடம் விஜயிடம் கேட்க கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன.

ஆனால் பெரிய அளவில் மாநாட்டை கூட்டி அதை வெற்றிகரமாகவும் நடத்தி முடித்து விட்டார். இப்போது கூட ஓராண்டு நிறைவை கொண்டாடும் வகையில் பிரசாந்த் கிஷோரையும் அழைத்து அந்த விழாவையும் கோலாகலமாக கொண்டாடிவிட்டார். இந்த நிலையில் நடிகர் விஷாலிடம் பத்திரிக்கையாளர்கள் விஜயை பற்றிய ஒரு கேள்வியை கேட்க அதற்கு கடுப்பாகி பதில் சொல்லிவிட்டு சென்றார் விஷால்.

அதாவது விஷாலிடம் ‘விஜய் கட்சி தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகிறது. ஆனால் இன்னும் அவருடைய கருத்துக்களை மறைமுகமாகவே சொல்கிறார். அது மட்டுமல்ல ஆளும் கட்சி மத்திய அரசு என இவர்களுக்கு எதிரான கருத்துக்களையும் மறைமுகமாகவே சொல்லிக் கொண்டு வருகிறார். இவருடைய அரசியல் பார்வை எப்படி இருக்கிறது என்பதை பற்றி சொல்லுங்கள்’ என விஷாலிடம் கேட்கப்பட்டது.

அதற்கு விஷால் முதல்ல பிரஸ வந்து சந்திக்க சொல்லுங்க. பத்திரிகையாளர்களை வந்து சந்திக்கட்டும். அவரிடம் கேட்கிற கேள்வியை என்கிட்ட கேக்குறீங்க .அவர் உங்களை எல்லாம் சந்திக்கும் பொழுது நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரிந்துவிடும் என சொல்லிவிட்டு சென்றார் விஷால்.

Tags:    

Similar News