விஜய் அப்படிப்பட்ட கதைகளை ஏன் தேர்ந்தெடுத்தாரு? எல்லாத்துக்கும் அப்பாதான் காரணமா?

விஜய்க்கும் அவரது தந்தைக்கும் என்ன தான் பிரச்சனை?

By :  sankaran
Update: 2024-10-16 02:30 GMT

நடிகர் விஜய் சமீப காலமாக தந்தை, மகன் கேரக்டர்களாக படங்களில் நடித்துக்கொண்டுள்ளார். இருவருக்கும் இடையே பிரச்சனையாகவும் இருக்கிறது. இதற்கு என்னதான் காரணம்? ஏன் இப்படிப்பட்ட கதைகளைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடிக்கிறார்? இதற்கு முன் அவருக்கும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே உள்ள பிரச்சனை தான் காரணமா என்றும் பார்க்கலாம்.

2020ல் விஜய் தன் ரசிகர்களை வைத்து அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியைத் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து அதன் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது.


அதோடு இதைக் கட்சியாகப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில் இதற்கு கடுமையான மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனக்கும் விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விஜய் தரப்பில் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து தனக்கும், மகனுக்கும் பிரச்சனை இருப்பதாகவும், அது குடும்பப் பிரச்சனை என்றும் தாங்கள் பேசிக் கொள்வது கிடையாது என்றும் வெளிப்படையாக அறிவித்து இருந்தார்.

அதன்பிறகு சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அதன் கொடி அறிமுக விழாவுக்கு விஜய் தனது பெற்றோரை அழைத்து இருந்தார். ஆனால் அவர்களிடம் ஆசி வாங்கவில்லை என்பது சர்ச்சையானது.

இந்நிலையில் விஜயோட கடைசி 3 படங்களில் அப்பா தான் மகனுக்கு வில்லனா இருந்தாங்க. ஏன் இந்த மாதிரியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறாரு.

என்ன தான் இருந்தாலும் அவருக்கும் அவரோட அப்பா எஸ்.ஏ.சி.க்கும் பிரச்சனை இருந்தாலும் அதை மனசுல வச்சித்தான் இந்த மாதிரியான கதைக்களத்தை அவர் தேர்ந்தெடுக்கிறாரா? அதுக்குக் காரணம் என்னன்னு வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொன்ன பதில் இதுதான்.

கோட் படத்துல மகனுக்கு அப்பா வில்லனா இருந்ததாக எப்படி நீங்க பார்க்குறீங்கன்னு புரியலை. அந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் அப்பாவுக்கு மகன் தானே வில்லனா இருந்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கோட், லியோ, பிகில்னு 3 படங்களில் தந்தை, மகன் கேரக்டரை ஏற்று விஜய் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News