நான் விழவும் மாட்டேன்... விடவும் மாட்டேன்... நெத்தி அடிதான்.. விஷால் அதிரடி!
பொங்கல் தினத்தையொட்டி நடிகர் விஷால் நடித்து சுந்தர்.சி. இயக்கிய மதகஜராஜா படம் வெளியானது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சுந்தர்.சி படத்தை ரொம்பவே கலகலப்பாகக் கொண்டு சென்றுள்ளார். படத்தில் சந்தானம் காமெடி பட்டையைக் கிளப்புகிறது. இந்த நிலையில் இன்று பிரஸ்மீட்டில் விஷால் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
நடிகர் சங்க கட்டிடம் நிச்சயமா மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். இது வந்து வெறும் நடிகர் சங்க கட்டிடம் மட்டுமல்ல. நாடக நடிகர்களின் விலாசம். அவங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
உடல்நிலை: இன்னைக்கு எம்ஜிஆர் ஐயா பிறந்தநாள். அன்னை தெரசாவுக்குப் பிறகு எம்ஜிஆர்தான் என்றார் விஷால். தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து கேள்வி கேட்டதற்கு இப்படி பதில் சொன்னார். எத்தனை பேரு போன் பண்ணி என்னை விசாரிச்சாங்க.
ஆரோக்கியமா இருக்கணும்னு வாழ்த்துனாங்க. என்னை பிடிச்சவங்க, பிடிக்காதவங்கன்னு எல்லாரும் விசாரிச்சாங்க. வெளிநாட்டுல இருந்து கூட நிறைய பேரு விசாரிச்சாங்க. விஷால் எப்ப விழுவான்னு காத்துக்கிட்டு இருந்தாங்க.
குளிர் ஜூரம்: விழவும் மாட்டான். விடவும் மாட்டான். நெத்தியடி தான் அடிப்பான். அன்னைக்கு எனக்கு அதிக காய்ச்சல். குளிர் ஜூரம். 12 வருஷம் கழிச்சி படம் வருது. சுந்தர்.சிக்காகவும் எனக்காகவும் போனேன். என்னால முடியல.
நரம்பு தளர்ச்சி: ஆனாலும் இதை மிஸ் பண்ணக்கூடாது. எப்படியாவது கலந்துக்கணும்னு போனேன். ஆனா அது சம்பந்தமா நரம்பு தளர்ச்சி, போதைக்கு அடிமைன்னாங்க. நல்ல கற்பனை. அதை வீட்டுலயே வச்சிக்கிட்டா நல்லது.
அதை டைரக்டர்தான் கிரியேட்டிவிட்டி பண்ணனும். அது எனக்கு பாசிடிவ்வா மாறிடுச்சு. அதுக்காக நீங்களும் மறைமுகமா உதவிருக்கீங்க. இந்த வீடியோ இவ்ளோ பெரிய வைரலாகிருக்கு. நிலநடுக்கம் வந்தா கூட உடனே மறந்துடுவாங்க.
கனடா வரைக்கும் நியூஸ்: ஆனா இப்படி மைக்கைப் பிடிச்சிட்டு கைநடுங்கினது கனடா வரைக்கும் நியூஸ் போயிடுச்சு. எத்தனை பேரோ வந்து விசாரிச்சாங்க. அவ்ளோ போன் கால்ஸ். விஷாலை பிடிக்குமான்னு ஒவ்வொரு வீட்டுலயும் கேட்டது மாதிரி இருந்தது என்கிறார் விஷால்.