ரஜினி இனியும் பணத்துக்காக நடிக்கணுமா? அந்த நடிகரை பாலோ செய்யலாமே…

ரஜினிகாந்தின் கைவசம் வரிசையாக படங்கள் இருக்கிறது.

By :  Akhilan
Update: 2024-10-02 09:41 GMT

Rajinikanth: கூலி திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய ரஜினிகாந்த் திடீரென உடல்நிலை குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அவருக்கு இருதயத்தில் செல்லும் ரத்தக்குழாயில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதற்கு ஸ்டென்ட் வைத்திருப்பதாகவும் அப்பல்லோ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. திட்டமிட்டபடி சிகிச்சை நல்லபடியாக முடிந்ததாகவும் இன்னும் சில தினங்களில் அவர் இல்லம் திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ரசிகர்களிடம் ரஜினி எப்போது மீண்டும் நடிப்பார் என மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசி இருக்கும் பிரபல திரை விமர்சகர் பிஸ்மி, தமிழ் சினிமாவின் அடையாளம் ரஜினிகாந்த். அவர் விரைந்து குணமாகி கூலி படத்துக்கு திரும்ப வேண்டும் என்பதே எல்லாரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் சமீபகாலமாகவே ரஜினிகாந்தின் உடல்நிலை அடிக்கடி குறைவு ஏற்படுகிறது. அவருக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருந்தது. அதை விடுத்து தற்போது முழுமையாக ஆன்மீகத்தில் இருக்கிறார். இருந்தும் அவர் வயோதிகமும் இந்த பிரச்னைகளுக்கு காரணமாகி இருக்கிறது. இனியும் ரஜினி இதுப்போல மசாலா படங்களில் நடிப்பது தேவைதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமிதாபுக்கும் இதேபோல கூலி படத்தில் 1982ம் ஆண்டு மரணபடுக்கை வரை சென்றார். அங்கு பிழைத்தவர். அதனுடன் ஆக்‌ஷன் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இருந்தும் அவருக்கு பாலிவுட்டில் கிடைக்கும் மதிப்பு குறையவே இல்லை. ரஜினியும் அமிதாப்பை பின்தொடர்வதே அவரின் உடலுக்கும் நல்லதாக அமையும்.

அதுமட்டுமல்லாமல் ரஜினிக்கு சினிமாவில் ஆறில் இருந்து அறுபது வரை போன்ற வித்தியாசமான கேரக்டர் நடிக்க தான் ஆர்வம். அவருக்கு கிடைத்த கமர்ஷியல் ஹிட் அவரின் ரூட்டை மாற்றிவிட்டது. இனிமேல் மசாலா படங்களில் நடித்துதான் அவர் சம்பாரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

அருமையான நடிகர் இனிமேல் தனக்கு பிடித்த கேரக்டர் ரோலில் நடிப்பது இன்னும் அவருக்கு புகழை தேடிதரும் என்பதே உண்மை. தன்னுடைய ரூட்டை ரஜினி மாற்றினால் நன்றாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News