தனுஷ் படத்தை வேணான்னு சொன்ன யூடியூப் பிரபலம்... காரணம்தான் பெரிய லொள்ளா இருக்கு..!

By :  SANKARAN
Update: 2025-05-18 07:49 GMT

சினிமா உலகம் என்பது ஒரு பெரிய கனவுத் தொழிற்சாலை. இந்த இடத்துக்குள் எல்லாராலும் எளிதில் நுழைந்து விட முடியாது. திறமையும், அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டுமே முடியும். அந்த விஷயத்தில் பெண்களுக்கு கூடுதலாக அழகும் தேவை. அப்படி எல்லாம் இருந்தாலும் எடுத்த உடனே எல்லாராலும் ஹீரோயினாகி விட முடியாது. முதலில் டான்ஸ் குரூப்ல ஒருவராக ஆட விடுவாங்க.

அப்புறம் கதாநாயகியின் தோழியாக நடிக்க வைப்பாங்க. அவங்க பார்ஃபார்மன்ஸ் எப்படி இருக்குன்னு பார்ப்பாங்க. அதெல்லாம் ஓகே ஆனா அவங்களுக்கு டெஸ்ட் ஷூட் எல்லாம் எடுத்துப் பார்த்து கதைக்குப் பொருந்துற மாதிரி முக அமைப்பும், நடிப்பு திறமையும் இருந்தால் தான் ஹீரோயின் ரோலுக்குப் போடுவாங்க.

முக்கியமாக டான்ஸ் உள்பட அனைத்துத் திறமைகளும் ஹீரோயின்களிடம் இருக்க வேண்டும். கவர்ச்சி காட்ட வேண்டிய இடத்தில் காட்ட வேண்டும். முடியாது என்று சொன்னால் அந்த வாய்ப்பு வேறு ஒருவருக்குப் போய்விடும். கடைசி வரை குணச்சித்திர நடிகை, துணை நடிகை, கதாநாயகி தோழி என அலைய வேண்டியதுதான். அந்த வகையில் நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தும் நடிக்க முடியாது என மறுத்துள்ளார் ஒரு பிரபலம். அவர் யாரு? எந்தப் பட வாய்ப்பு? இதுக்கு முன்னாடி அவர் சினிமாவில் நடித்துள்ளாரா என்று பார்க்கலாம்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் செகண்ட் ஹீரோயினா நடிக்கக் கூப்பிட்டாங்களாம். அதனால தான் வேணாம்னு சொல்லிட்டாராம் யூடியூப் பிரபலம் கனி.


சினிமாவுல நடிக்க வாய்ப்பு கிடைக்கிறதே குதிரைக் கொம்பு. அதிலும் முன்னணி நடிகரான தனுஷ் படத்துல வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதிலும் பெட்மாஸ் லைட்டே தான் வேணுமா அப்படிங்கற மாதிரி தான் கேட்க வேண்டியிருக்கு இந்த பிரபலத்திடம். இப்படி கோட்டை விட்டுட்டாரே என்கின்றனர் நெட்டிசன்கள். 

தனுஷ் தற்போது தானே தயாரித்து இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இதைத் தொடர்ந்து அவருக்குப் பல படங்கள் வரிசையாக உள்ளன. அதில் ஒன்றுதான் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது. சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற தனுஷ் படம் வரும் ஜூன் 20ல் வெளியாகிறது. 

Tags:    

Similar News