யுவன் செய்த மேஜிக்!. ஜீவாவுக்கு இப்படி ஒரு லக்!. ராஜாவின் மாஸ்டர் பீஸ் பாட்டு அவருக்குதான்!..
Ilayaraja: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனதை மயக்கும் பல சூப்பர் மெலடி பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. குறிப்பாக 1980களில் இளையராஜா இசையமைத்த பல பாடல்கள்தான் இப்போது 70 மற்றும் 80 கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களாக கார் பயணங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இளையராஜா சாதனை: அவருக்கு பின் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்துவிட்டாலும் இன்னமும் அவரின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. அவரின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. இன்னமும் சூப்பர் ஹிட் மெலடி பாடல்களை அவர் கொடுத்து வருகிறார். இன்னமும் 80களில் அவர் இசையமைத்த பல பாடல்களை ரீ கிரியேட் செய்து இயக்குனர்கள் தங்களின் படங்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா: குறிப்பாக இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா பல படங்களில் தனது அப்பாவின் பாடலை ரீ-கிரியேட் செய்து வருகிறார். சந்தானம் நடித்து வெளியான ‘டிக்கிலோனா’ படத்தில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம் பெற்ற ’பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடலை மறு உருவாக்கம் செய்திருந்தார்.
அதே படத்தில் இடம் பெற்ற ‘ரம் பம் பம்’ பாடலை ‘காபி வித் காதல்’ படத்தில் ரீ கிரியேட் செய்திருந்தார். இப்படி தனது அப்பாவின் பல பாடல்களை பல படங்களில் பயன்படுத்தி இருக்கிறார் யுவன். அந்தவகையில், ராஜாவின் எவர் கிரீன் கிளாசிக் பாடல் நடிகர் ஜீவாவுக்கு அமைந்திருக்கிறது.
எவர்கிரீன் மெலடி: மூடுபனி படத்தில் பிரதாப் போத்தன் பாடும் ‘என் இனிய பொன் நிலவே’ பாடல்தான் ஜீவாவுக்கு கிடைத்திருக்கிறது. இளையராஜாவின் மாஸ்டர் பீஸ் மெலடி இது. இயக்குனர் கவுதம் மேனன் ‘நான் ஒவ்வொருமுறை கதை எழுத துவங்குவதற்கு முன்பும் இந்த பாடலைத்தான் கேட்பேன்’ என சொல்லியிருந்தார். 1980ம் வருடம் மூடுபனி திரைப்படம் வெளிவந்தது.
இந்நிலையில், பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ‘அகத்தியர்’ படத்தில் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை யுவன் ரீ-கிரியேட் செய்திருக்க்கிறார். இந்த பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த திரைப்படம் வருகிற 31ம் தேதி வெளியாகவுள்ளது.