சினிமா அவ்ளோ பெரிய சீன் இல்லை!.. அதை விட முக்கியமானது நிறைய இருக்கு.. பொசுக்குன்னு சொன்ன எச். வினோத்!..

இயக்குனர் எச். வினோத் சினிமாவுக்கு மக்கள் அதிக நேரத்தை செலவழிப்பது தேவையற்ற செயல் என பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச். வினோத் இன்று 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையும் படிங்க: சென்னையில ஜவான் புரமோஷனுக்கு நோ!.. திருப்பதியில் ஷாருக்கானுடன் சாமி கும்பிட்ட நயன் (வீடியோ)… தமிழில் திரைப்பட பெயர்களை வைப்பது மட்டுமின்றி சமூக கருத்துக்கள் […]

By :  Saranya M
Update: 2023-09-05 09:30 GMT

இயக்குனர் எச். வினோத் சினிமாவுக்கு மக்கள் அதிக நேரத்தை செலவழிப்பது தேவையற்ற செயல் என பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச். வினோத் இன்று 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதையும் படிங்க: சென்னையில ஜவான் புரமோஷனுக்கு நோ!.. திருப்பதியில் ஷாருக்கானுடன் சாமி கும்பிட்ட நயன் (வீடியோ)…

தமிழில் திரைப்பட பெயர்களை வைப்பது மட்டுமின்றி சமூக கருத்துக்கள் கொண்ட படங்களை தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அடுத்ததாக உலகநாயகனின் 233வது படத்தை இயக்க உள்ள எச். வினோத் சினிமா பற்றி வெளிப்படையாக பேசிய பேச்சு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

புதிய படங்கள் பொங்கலுக்கு வருகிறது என்றால் அந்த படத்தின் ரிலீஸுக்கு முன்னாடி 3 நாட்களுக்கு முன்னதாக படத்தின் ட்ரெய்லரை பார்த்து விட்டு படத்தை பார்க்கலாமா, வேண்டாமா என முடிவு செய்தாலே போதும். அந்த படம் நல்லா இருந்தா இன்னும் 4 பேருக்கு சொல்லுங்க அவ்ளோ தான்.

இதையும் படிங்க: சேரன் பட இயக்குநரை டார் டாராக கிழித்த பயில்வான் ரங்கநாதன்!.. பதில் சொல்லமுடியாமல் வடிவேலாவே மாறிட்டாரே!..

அதை விட்டு விட்டு படத்தின் அப்டேட் கேட்டு அலைவது, ஃபர்ஸ்ட் லுக்கிற்கு வெயிட் செய்வது, டீசர், டிரெய்லர் வியூஸுக்காக மல்லுக்கட்டி சமூக வலைதளங்களில் தேவையற்ற சண்டைகளை போட்டு மக்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணடித்து வருவது ரொம்பவே வருத்தமடைய செய்கிறது என சமூக அக்கறையுடன் எச். வினோத் பேசியிருப்பது ரசிகர்களின் அட்ராக்‌ஷனை அள்ளி உள்ளது.

இளைஞர்களின் நேரம் ரொம்பவே முக்கியமான ஒன்று உங்கள் நேரத்தை சினிமாவுக்கு இப்படி தேவையில்லாமல் செலவு செய்வது வேண்டாத வேலை என சினிமா துறையில் இருந்தாலும் உண்மையை துணிச்சலோடு சொல்ல துணிவு இயக்குநரால் தான் முடியும் என அஜித் ரசிகர்கள் பிறந்தநாள் அதுவுமாக அவர் பேசிய பேட்டி வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

Similar News