அஜித் செட்டே ஆகல!.. பிடிக்கவே இல்லை!. சுனாமி வந்து தூக்கட்டும்னு நினைச்சேன்.. புலம்பும் இயக்குனர்!
சினிமாவில் ஒரு இயக்குனர் ஒரு கதையை உருவாக்குவார். அந்த கதைக்கு இவர்தான் சரியாக இருப்பார் என இயக்குனருக்கு ஒரு எண்ணம் வரும். அல்லது புதுமுக நடிகர்களை நடிக்க வைக்கலாம் எனவும் சிலர் யோசிப்பார்கள். எதுவாக இருந்தாலும் அந்த கதைதான் அதை தீர்மானிக்கும். கதை என்ன சொல்கிறதோ, கதை எதை கேட்கிறதோ அதை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு கதைக்கு செட் ஆகாத நடிகர்களை நடிக்க வைத்தால் அந்த படம் கண்டிப்பாக தோல்வியையே சந்திக்கும். இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் […]
சினிமாவில் ஒரு இயக்குனர் ஒரு கதையை உருவாக்குவார். அந்த கதைக்கு இவர்தான் சரியாக இருப்பார் என இயக்குனருக்கு ஒரு எண்ணம் வரும். அல்லது புதுமுக நடிகர்களை நடிக்க வைக்கலாம் எனவும் சிலர் யோசிப்பார்கள். எதுவாக இருந்தாலும் அந்த கதைதான் அதை தீர்மானிக்கும். கதை என்ன சொல்கிறதோ, கதை எதை கேட்கிறதோ அதை செய்ய வேண்டும்.
அதை விட்டுவிட்டு கதைக்கு செட் ஆகாத நடிகர்களை நடிக்க வைத்தால் அந்த படம் கண்டிப்பாக தோல்வியையே சந்திக்கும். இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாலச்சந்தர் ஆகியோர் தனது படங்களில் நிறைய புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்து வைத்ததற்கு காரணம் அதுதான். அதனால்தான் அவர்கள் வெற்றி பெற்றனர்.
ஆனந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன்பின் ரன், சண்டக்கோழி என அதிரடி ஆக்சன் படங்களை எடுத்தார். தொடர் வெற்றிப்படங்களை கொடுத்ததால் இவரின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்பட்டனர்.
அப்போதுதான் அஜித்தை வைத்து ஜீ எனும் படத்தை இயக்கினார் லிங்குசாமி. இந்த படத்தின் கதாநாயகியாக திரிஷா நடித்திருந்தார். ‘தேவன் கோவில் மணி’ என்கிற மனதை மயக்கும் மெலடி பாடலும் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால், இந்த படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை. எனவே, படம் தோல்வி அடைந்தது.
அடுத்து விஷாலை வைத்து சண்டக்கோழி படத்தை கொடுத்தார் லிங்குசாமி. அப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் இயக்கிய பீமா ஓடவில்லை. ஆனால், அடுத்து இயக்கிய பையா படம் வெற்றி பெற்றது. அடுத்து இயக்கிய வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் ஆகிய படங்கள் ஓடவில்லை.
இந்நிலையில், ஜி படம் பற்றி பேசிய லிங்குசாமி ‘அந்த படத்தில் எனக்கு மிகவும் இளமையான தோற்றம் கொண்ட ஒரு பையனே தேவைப்பட்டான். ஆனால், ‘அஜித் நடிக்க ஆசைப்படும் போது அதை தவிர்க்க வேண்டாம்’ என எல்லோரும் சொன்னார்கள். ஆனால், அஜித் வந்தபின் எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை. அந்த படம் எடுக்கும்போது சுனாமி வந்து எடுத்த பிலிம் எல்லாம் அடித்துக்கொண்டு போய்விட வேண்டும் என்று கூட ஆசைப்பட்டேன்’ என வேதனையுடன் பேசி இருக்கிறார் லிங்குசாமி.