கழுத்தில் தாலியோடு அந்த நடிகருடன் ரொமான்ஸ்!.. ஓவர் ஆட்டம் போடும் கீர்த்தி....

By :  Murugan
Update: 2024-12-24 04:45 GMT

Keerthi suresh: தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரின் அம்மா மேனகா ரஜினியோடு நெற்றிக்கண் படத்தில் நடித்தவர். 80களில் சில தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். அம்மா நடிகை என்பதாலோ என்னவோ கீர்த்திக்கும் சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம்.



 


இது என்ன மாயம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய கீர்த்தி ரஜினி முருகன், ரொமோ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அப்படியே தெலுங்கு சினிமாவுக்கும் சென்று படங்களில் நடிக்க துவங்கினார். தமிழை விட தெலுங்கில் அவருக்கு நல்ல வேடங்கள் கிடைத்தது.

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மகாநடி படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதும் வாங்கினார். தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்த எல்லா படங்களிலுமே அவருக்கு கனமான கதாபாத்திரங்கள் கிடைத்தது.


தமிழில் விஜய், தனுஷ், விஷால், சூர்யா என பலருடனும் நடித்தார். 10 வருடங்களுக்கும் மேல் காதலித்து வந்த ஆண்டனி என்பவரை சமீபத்தில் கோவாவில் திருமணமும் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் விஜய், திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


திருமணத்திற்கு முன்பே ஹிந்தியில் அட்லி தயாரித்த பேபி ஜான் என்கிற படத்தில் கீர்த்தி நடித்திருந்தார். இது தமிழில் விஜய் நடித்த தெறி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் கிறிஸ்துமஸை குறி வைத்து நாளை வெளியாகவுள்ளது. எனவே, கடந்த சில நாட்களாக இந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு வருகிறார்.


அந்தவகையில், பேபி ஜான் பட புரமோஷனுக்காக அந்த படத்தில் நடித்த வருண் தவானுடன் ஹிந்தி பிக்பாஸ் வீட்டுக்கு போயிருக்கிறார். அப்போது சற்று கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீர்த்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதுவும் மிகவும் நெருக்கமாக கீர்த்தி சுரேஷ் போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.



 



Tags:    

Similar News