இது மாதிரி நிறைய போட்டோ போடு செல்லம்!.. சைடு கேப்புல மொத்த அழகையும் காட்டும் ஸ்ரீலீலா!..
Sreeleela: கடந்த சில வருடங்களில் திடீரென பிரபலமானவர்தான் நடிகை ஸ்ரீலீலா. இவர் பிறந்தது அமெரிக்காவில். வளர்ந்து எல்லாம் பெங்களூரில். சிறுவயது முதலே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சிறுமியாக இருக்கும்போதே பரதநாட்டியமும் கற்றுக்கொண்டார்.
டாக்டராக வேண்டும் என ஆசைப்பட்டு எம்.பி.பி.எஸ் படித்தார். 2 மாற்றுத் திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 2017ம் வருடம் தெலுங்கு சினிமாவில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க துவங்கினார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகவே 2019ம் வருடம் வெளிவந்த ‘கிஸ்’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.
இந்த படம் ஹிட் அடித்தது. அதோடு, ஸ்ரீலீலாவின் அழகை பத்திரிக்கைகள் வர்ணித்து எழுதியது. அதன்பின் தெலுங்கு, கன்னடம் என மாறி மாறி நடிக்க துவங்கினார். பல படங்களில் நடித்திருந்தாலும் மகேஷ் பாபு நடித்த ‘குண்டூர் காரம்’ படத்தில் இவருக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. அந்த படத்தில் வந்த ஒரு குத்துப்பாட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
எப்படிப்பட்ட நடனம் என்றாலும் இடுப்பை வளைத்து வளைத்து ஆடி பிரமிக்க வைப்பது ஸ்ரீலீலாவின் வழக்கம். அவருக்கு ஏற்றது போல் அந்த பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த மாதம் வெளியாகி 1500 கோடி வசூல் செய்த புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.
இப்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும் சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார். இதுதான் ஸ்ரீலீலாவின் முதல் நேரடி தமிழ் திரைப்படமாகும். இந்நிலையில், ஸ்ரீலீலாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வரவேற்பை பெற்றிருக்கிறது.