அடிக்குது யோகம்.. பிரபல அட்டைபடத்திற்கு உள்ளாடையுடன் போஸ் கொடுத்த ராஷ்மிகா.. வைரல் கிளிக்..!
காஸ்மோ பாலிட்டன் என்கின்ற மேகசீனில் நடிகை ராஷ்மிகா மந்தனா புகைப்படம் இடம்பெற்று இருக்கின்றது.
ராஷ்மிகா மந்தனா: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவிற்கு வெற்றியை கொடுத்து. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா மீண்டும் விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து டியர் காம்ரேட் என்கின்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார்.
அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்திருக்கின்றார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார்.
தனுஷ் நடிப்பில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். அதேபோல கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது பான் இந்தியா அளவுக்கு பிரபல நடிகையாக வலம் வருகின்றார்.
அதிலும் அனிமல் படம் இவருக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்த நிலையில், புஷ்பா 2 திரைப்படமும் தற்போது 1000 கோடி ரூபாயை தாண்டி 1500 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இப்படி தொடர்ந்து அவரின் படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருவதால் அடுத்த அடுத்த படங்களில் அவரை கமிட் செய்வதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் படங்களில் நடிக்கும் போது கவர்ச்சியில் தாராளம் காட்டுவதில் சற்றும் தயங்குவது கிடையாது ராஷ்மிகா மந்தனா. இதனை நாம் புஷ்பா 2 திரைப்படத்திலேயே பார்த்திருப்போம். என்னதான் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ராஷ்மிகா.
அவ்வப்போது தான் எடுக்கும் போட்டோ சூட் புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது பிரபல இதழ் ஒன்றின் அட்டை படத்திற்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படம் இதோ.