தளதளன்னு தக்காளி பழம் போல இருக்க!.. பிரியங்காவிடம் ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்.. போட்டோஸ் அப்படி!..

By :  Murugan
Update:2025-02-14 13:43 IST

Priyanka Mohan: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிரியங்கா மோகன். துவக்கத்தில் சில கன்னட படங்களில் நடித்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் போனார். முதல் படமே நானிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு. அப்படி வெளியான கேங்ஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அப்போதுதான் நெல்சன் தான் இயக்கும் டாக்டர் படத்திற்கு புதிய முகத்தை தேடிக்கொண்டிருந்தார்.


பிரியங்கா மோகன் கண்ணில் படவே அவரை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். இந்த படத்தில் காமெடி கலந்த கதாநாயகி வேடம். அதை சரியாகவே செய்திருந்தார் பிரியங்கா. அதோடு, டாக்டர் படம் சூப்பர் ஹிட் அடித்து 100 கோடி வசூலை அள்ளியது.


 இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் வந்தது. எனவே, அந்த படத்திலும் நடித்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.


அதன்பின் தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தார். ஜெயம் ரவியுடன் பிரதர் படத்தில் நடித்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஊத்திக்கொண்டது. நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். வாய்ப்புகளை பெறுவதற்காக க்யூட்டாக போஸ் கொடுத்து தொடார்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்தவகையில் புடவையில் க்யூட்டான அழகை காட்டி பிரியங்கா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் வரும் கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கு பிரியங்கா நடனமாடியிருக்கிறார். இந்த படம் வருகிற 22ம் தேதி வெளியாகவுள்ளது.



 


Tags:    

Similar News