22 வயசுல 17 வயசு பொண்ணுக்கு அம்மா... யார் அந்த துணிச்சல் நடிகை? பாலசந்தர் படம்தான்!

By :  SANKARAN
Published On 2025-05-30 16:19 IST   |   Updated On 2025-05-30 16:19:00 IST

தமிழ்த்திரை உலகில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர் ஸ்ரீவித்யா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 53வது வயதிலேயே இந்த மண்ணை விட்டு மறைந்ததுதான் சோகம்.

இவரது அம்மா புகழ்பெற்ற கர்நாடகப் பாடகி எம்.எல். வசந்தகுமாரி. நாட்டியப் பேரொளி பத்மினி வீடு அருகில் தான் ஸ்ரீவித்யாவின் வீடும் இருந்தது. ஸ்ரீவித்யா அழகு மட்டும் இல்லாமல் பாட்டு, நடனம் என அத்தனையிலும் சிறப்பு தான். திருவருட்செல்வர் படத்தில் பார்வதியா வந்து நடனமாடி அசத்தினார்.

நூற்றுக்கு நூறு படம் தான் இவருக்கு பிரபலம். சின்ன ரோல் தான். நெகடிவ் கேரக்டர். கலக்கிருப் பாங்க. அப்புறம் மெட்ராஸ் டு டெல்லி, சொல்லத்தான் நினைக்கிறேன் படங்களில் இவரது நடிப்பு அருமையாக இருந்தது.

22 வயசுல அபூர்வ ராகங்கள் படத்துல பாடகி பைரவி கேரக்டர்ல ஸ்ரீவித்யா நடித்தார். அந்தப் படத்துல அவருக்கு மகளா நடிச்ச நடிகையின் வயது 17. இப்ப உள்ள ஹீரோயின் 40 வயசுக்கு மேலயும் இருக்காங்க. ஆனா அந்தக் காலத்துலயே ஸ்ரீவித்யா அப்படி நடிச்சாங்கன்னா அதுக்கு துணிச்சல் வேணும். அந்தப் படத்தின் இயக்குனர் கே.பாலசந்தர் என்பதால் தான் இவரே ஒத்துக்கொண்டாராம்.


அவர் எப்பவுமே கதைக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார். தவிர, இந்தப் படத்தில் கமல், ரஜினி என இருவரும் நடித்து இருந்தனர். ரஜினி இந்தப் படத்தில் தான் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

1975ல் பாலசந்தர் இயக்கத்தில் கமல், ஸ்ரீவித்யா, ரஜினி, மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதா, நாகேஷ் உள்பட பலர் நடித்த படம் அபூர்வ ராகங்கள். எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். அதிசய ராகம், கை கொட்டி சிரிப்பார்கள், கேள்வியின் நாயகனே, ஏழு ஸ்வரங்களுக்குள் ஆகிய பாடல்கள் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Tags:    

Similar News