வருஷம் 365 நாளும் புதுப்புடவை கட்டும் நடிகை... அட அவங்களா... அது! எப்படிம்மா இப்படி?!

By :  Sankaran
Update: 2024-12-27 02:30 GMT

தலைப்புல என்ன நடிகைன்னு சொல்லிட்டு ராமராஜனையும், டிஆரையும் படத்துல வச்சிட்டீங்களேன்னு கேட்பது புரிகிறது. இவர்களுக்கும் இந்த நடிகைக்கும் சம்பந்தம் இருக்கு. ஒரு சின்ன சஸ்பென்ஸ்தான். தொடர்ந்து யாருன்னு பார்க்கலாம் வாங்க.

நடிகைகள்னாலே ரொம்ப ஆடம்பரமா இருப்பாங்க. அவங்களுக்கு உடை அலங்காரம், முகம் மற்றும் உடல் அழகு பராமரிப்புக்கே நேரம் சரியா இருக்கும். சம்பாதிக்கிறதுல பெரும்பாலான செலவு இதற்குத்தான் போகும். அந்த அளவுக்கு அவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள். அவர்களுக்கு முதலே அதுதானே. அப்புறம் செய்ய மாட்டாங்களா என்ன?

அந்த வகையில் நடிகை ஒருவர் வருஷம் முழுக்க அதாவது வருடத்தில் 365 நாள்களுமே தினம் தினம் புதுப்புது புடவையாகத் தான் கட்டுவாராம். அவருக்கு அதில்தான் அலாதி ஆர்வமாம். இப்படியும் கூட இருக்கிறார்களா என்று ஆச்சரியமாக உள்ளது. அந்த நடிகை யார்? இதுகுறித்து அவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

80களில் தமிழ், மலையாளம் மொழிப்படங்களில் கலக்கியவர் நளினி. இவர் 1987ல் நடிகர் ராமராஜனைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு அருணா, அருண் என்று இரு பிள்ளைகள் உள்ளனர்.


2000மாவது ஆண்டில் நடிகர் ராமராஜனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இவரது பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் தற்போது புடவை கட்டும் ஆசையைக் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

எனக்கு தினமும் புது புடவை கட்டியே ஆகணும். 365 நாளும் புதுசு கட்டணும். எனக்கு நகை மேல எல்லாம் ஆசையே கிடையாது. ஆனால் தினமும் எனக்கு புது புடவை இருக்கணும். என் பிள்ளைகளே இன்னைக்கு கட்ட இருக்கா, இல்ல அனுப்பி விடவா என்று கேட்பார்கள். எங்க சூட்டிங் போனாலும் அங்க புடவை வாங்கிடுவேன்.

அதுக்குன்னே தனியாக ஒரு வீடு வைத்திருக்கிறேன். எல்லாத்தையும் மொத்தமா குவித்து வைத்திருக்கிறேன். ஒரு தடவை கட்டினால் அந்த புடவையை மறுபடியும் கட்டவே மாட்டேன். இதை பல வருஷமா நான் பாலோ பண்றேன் என்கிறார் நடிகை நளினி.


இவர் நடிகை மட்டுமல்ல. சிறந்த நகைச்சுவை நடிகை, தயாரிப்பாளரும் கூட. ராணுவ வீரன், ஓம் சக்தி, உயிர் உள்ளவரை உஷா, சரணாலயம், மனைவி சொல்லே மந்திரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். மல்லி, நினைத்தேன் வந்தாய் ஆகியவற்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News