லட்சுமியை பற்றி இப்படி சொல்லலாமா? மோகன்சர்மாவை லெஃப்ட் ரைட் வாங்கிய பிரபலம்

By :  Rohini
Update: 2024-12-26 08:56 GMT

lakshmi

லட்சுமி:

80களில் ஒரு ஆகச்சிறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை லட்சுமி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு தன் ஸ்டைலில் கொடுக்கும் ஒரு அற்புதமான நடிகை. அவர் நடிப்பதற்கு முன்பாகவே அவருடைய முகம் நடித்து விடும். அத்தனை முக பாவனைகளையும் கண் முன் கொண்டு வந்துவிடுவார். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவுக்கே டஃப் கொடுத்த நடிகை லட்சுமி.

எத்தனையோ படங்களை அவருடைய நடிப்புக்கு உதாரணமாக சொன்னாலும் சம்சாரம் அது மின்சாரம் படம் காலங்காலமாக நின்று பேசும் படமாக அமைந்திருக்கின்றது. ஹீரோயினாக அம்மாவாக பாட்டியாக என பல கேரக்டர்களில் நடித்து சாதனை படைத்தவர் லட்சுமி. சினிமாவில் பேரையும் புகழையும் பெற்ற லட்சுமியின் சொந்த வாழ்க்கை பற்றி அவ்வளவாக யாருக்குமே தெரியாது.

மோகன்சர்மா சொன்ன ஷாக்:

ஆனால் அவருடைய மகள் ஐஸ்வர்யா என அனைவருக்கும் தெரியும். ஆனால் லட்சுமியும் ஐஸ்வர்யாவும் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று கூட ஒரு தகவல் இருக்கிறது. லட்சுமியை பற்றி பிரபல திரைப்பட நடிகர் மோகன் சர்மா திடுக்கிடும் தகவல் ஒன்றை முன்னதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நானும் லட்சுமியும் ஒரு ஹோட்டலுக்கு சென்றோம். அப்போது லட்சுமி ‘ஏன் நாம் திருமணம் செய்ய கூடாது’ என கேட்டார்.

அதற்கு நான் முடியாது என சொன்னேன். அந்த ஹோட்டல் அறையில் நாங்கள் இருவரும் தான் இருந்தோம். அதன் பிறகு என்ன நடக்க போகிறது என என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கேற்ப எல்லாம் நடந்தும் முடிந்தது என்ற வகையில் பேசியிருந்தார். இவர் சொன்ன இந்த கருத்துக்கு எதிராக ஜெயந்தி கண்ணப்பன் ‘எப்படி இந்த மாதிரி பகிரங்கமாக வெளியில் பேசமுடிகிறது?


கட்டுக்கோப்பாக இருப்பவர்:

திரைத்துறையை சார்ந்தவர்களே இப்படி பேசும் போது வெளியில் உள்ளவர்கள் எப்படி பேசாமல் இருப்பார்கள்’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கிடையில் லட்சுமி மிகவும் டிசிபிளின் லேடி. இன்னும் அவர் தன் பழக்க வழக்கங்களை மிகவும் வரைமுறையோடு கொண்டு போய்க் கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி செய்வது, அவரே சமைப்பது, படங்களில் நடிப்பது என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் லட்சுமி. மோகன்சர்மா இப்படியெல்லாம் பேசியிருக்க கூடாது என ஜெயந்தி கண்ணப்பன் கூறினார். 

Tags:    

Similar News