முதல் படத்துக்கு டேன்ஸ் சொல்லி கொடுத்தவர்!. ஞாபகம் வச்சி அஜித் செய்த அந்த விஷயம்!..

By :  Murugan
Update: 2025-01-31 07:59 GMT

Ajithkumar: அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித். இந்த படத்திற்கு முன் பிரேம புஸ்தகம் என்கிற தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார். அமராவதி படம் அஜித்துக்கு நல்ல துவக்கமாக இருந்தது. அதன்பின் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

அஜித்துக்கு இரண்டு திரைப்படங்கள் அதிக ரசிகர்களை கொண்டு வந்தது. ஒன்று பில்லா, மற்றொன்று மங்காத்தா. இந்த படங்கள் அவரை மாஸ் ஹீரோவாக மாற்றியது. எனவே, விஜய்க்கு டஃப் கொடுக்கும் நடிகராக மாறினார். ஒரு கட்டத்தில் இருவரும் போட்டி நடிகர்களாகவும் மாறினர்கள்.

சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை யாரும் நினைவில் வைத்து கொள்ளமாட்டார்கள். சிலர் மட்டுமே அதை ஞாபகம் வைத்திருப்பார்கள். ஒரு நடிகருக்கு ஒருவர் உதவியிருப்பார். ஆனால், அந்த நடிகர் பெரிதாக வளர்ந்த பின் அதையெல்லாம் மறந்துவிடுவார். இது சினிமாவில் சகஜம். இன்னும் சிலருக்கு ஞாபகம் இருந்தாலும் இல்லாதது போல நடந்துகொள்வார்கள்.


இந்நிலையில்தான், 90களில் பல படங்களுக்கும் நடன இயக்குனராக பணியாற்றிய கலா மாஸ்டர் ஊடகம் ஒன்றில் பேசியபோது அஜித் பற்றி ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார். அஜித் அமராவதி படத்தில் நடித்தபோது அவருக்கு என் சித்தியின் மகன்தான் நடனம் சொல்லி கொடுத்தான்.

விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது அவன் அங்கு போயிருந்தான். அவனை பார்த்தும் ‘உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன்’ என அஜித் யோசித்துகொண்டே இருந்தாராம். அதன்பின் ‘உங்களை கலா மாஸ்டர் வீட்டில்தானே பார்த்தேன். எனக்கு டேன்ஸ் சொல்லி கொடுத்தீங்க’என சொல்லி ஆச்சர்யம் கொடுத்திருக்கிறார். 26 வருடங்கள் கழித்தும் அஜித் நியாபகம் வைத்திருந்தது பெரிய விஷயம்.

சினிமாவில் அப்படிப்பட்டவர்களை பார்ப்பது அரிது. தெரிந்தாலும் தெரியாதது போல போய்விடுவார்கள். ஆனால், அஜித் ஜென்டில்மேன். மிகவும் எளிமையானவர்’ என கலா பேசியிருந்தார். அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி வருகிற பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவுள்ளது. அதேபோல், குட் பேட் அக்லி படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News