பல ஊர்களில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்!.. 1000 கோடிக்கு சொந்தக்காரரா நடிகை ராதா?!...
Actress Radha: பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் ராதா. கேரளாவை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் உதய சந்திரிகா. இவரின் பெயரை ராதா என மாற்றியது பாரதிராஜா. அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
80களில் நம்பர் ஒன் நடிகை: 80களில் ஹீரோக்களாக இருந்த மோகன், கார்த்திக், கமல், ரஜினி, சத்தியராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். இவரை போலவே இவரின் அக்கா அம்பிகாவும் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் இருவருமே கொடிகட்டி பறந்தார்கள். சிவாஜியுடன் கூட பல படங்களில் நடித்திருக்கிறார் ராதா.
அதுவும் முதல் மரியாதை படத்தில் ராதா வெளிப்படுத்திய நடிப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் சீக்கிரத்தில் மறக்கமாட்டார்கள். அந்த படத்தில் மட்டும் அவர் தனது சொந்த குரலில் பேசியிருந்தால் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கியிருப்பார். 1991ம் வருடம் ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ராதாவின் மகள்கள்: இவருக்கு 2 மகள்கள். மூத்தவர் கார்த்திகா. இவர் ஜீவா நடித்த கோ படத்தில் நடித்தார். இளையவர் துளசி நாயர். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் உள்ளிட்ட 2 படங்களில் நடித்தார். அதன்பின் அவர்கள் இருவரும் சினிமாவில் நடிக்கவில்லை. அதேபோல். ராதாவும் சின்னத்திரை பக்கம் போய் சில நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்தார்.
இதைப்பார்த்த பலரும் அவருக்கு கடன் சுமை. அதனால்தான் சின்னத்திரைக்கு வந்துவிட்டார் என பேசினார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை. சினிமாவில் சம்பாதித்த பணத்தில் சென்னை மற்றும் கேரளாவில் சினிமா ஷூட்டிங் நடக்கும் ஸ்டுடியோக்களை உருவாக்கினார். இப்போது வரை அது அவருக்கு வருமானத்தை கொடுத்து வருகிறது.
1000 கோடிக்கு அதிபதி: அதன்மூலம் கிடைத்த வருமானத்தில் இந்தியாவில் பல இடங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பல நட்சத்திர ஹோட்டல்களை நடத்தி வருகிறார். மும்பையில் இவருக்கு சொந்தமான வணிக வளாகம், தியேட்டர், ஹோட்டல்கள் இருப்பதாகவும், இவரிடம் சுமார் 4 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவரின் வியாபரங்களை அவரின் இரு மகள்களும் கவனித்து வருவதாக வருகிறார்கள். ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்து வைத்திருப்பதால்தான் ராதா சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார் என சொல்லப்படுகிறது.