ஒரு வார்த்தைக்கு 5 நாட்கள் யோசித்த மிஷ்கின்!. பிசாசு படத்தில் வரும் அந்த வசனம்!...
Director Mysskin: சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் மிஷ்கின். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். இந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து அஞ்சாதே படத்தை இயக்கினார். அந்த படமும் ஹிட். அதன்பின் நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ, பிசாசு உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கோணங்களில் கதை சொல்லும் இயக்குனர் மிஷ்கின். கேமரா கோணங்களிலேயே கதை சொல்வார். இவரின் திரைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் உண்டு. சினிமாவில் எப்போதும் புதிய முயற்சிகளை மிஷ்கின் செய்து பார்ப்பார். அஞ்சாதே படத்தில் பாண்டியராஜனை வில்லாக நடிக்க வைத்திருந்தார்.
நந்தலாலா மற்றும் ஒநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களில் அவரே ஹீரோவாக நடித்தார். யுத்தம் செய் படத்தில் சேரனை யாருமே கற்பனை செய்து பாக்கமுடியாத வேடத்தில் நடிக்க வைத்தார். ஹாலிவுட்டில் வெளிவந்த ஷெர்லாக் ஹோம் பட ஸ்டைலில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார்.
பெண்களை கொடுமையாக கொலை செய்யும் ஒரு சைக்கா கொலைகாரனுக்குள் இருக்கும் குழந்தையை சைக்கோ படத்தில் காட்டியிருந்தார். எல்லோரும் பேயை காட்டி பயமுறுத்தினால் மிஷ்கின் பேயை தேவதையாக காட்டி பிசாசு படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.
கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் நடித்து வருகிறார் மிஷ்கின். சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். இன்று வெளியான டிராகன் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஒருபக்கம், சினிமா விழாக்களில் கெட்டவார்த்தைகளில் பேசி சர்ச்சைகளிலும் சிக்குவார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய மிஷ்கின் ‘பிசாசு படத்தில் நான் நிறைய சொல்லி இருக்கிறேன். சாகும்போது எந்த பொண்ணாவது சிரிச்சிட்டு இருக்குமா?.. 'என்னோட காதலனை நான் பாத்துட்டேன்.. ஆனா சாகப்போறேன், அவன்தான் என்ன கொலை பண்ணவன். அதனாலதான் அவ சாகும்போது அவனோட கையை புடிக்கிறா.. கையை பிடிக்கும்போது ஒரு வார்த்தை சொல்லணும். அதுக்காக 5 நாட்கள் கஷ்டப்பட்டேன். எல்லா பெண்களுக்கும் அவர்களின் அப்பாதான் முதல் கதாநாயகன். அதனால்தான் ‘பா’ என அவர் சொல்வது போல காட்சியை எடுத்தேன்.