அத இத காண்பிக்கிறது காதலா? சேது படம் சுத்தமா பிடிக்கல.. இப்படி சொல்லிட்டாரு

By :  Rohini
Update:2025-02-22 10:14 IST

மூட நம்பிக்கைகளை எதிர்த்து: சினிமாவில் காட்டப்படும் சில கதைகள் ஒருவகையில் நம்பும் வகையிலும் இன்னொரு வகையில் ஏற்கத்தக்க இயலாத வகையிலும் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதெல்லாம் வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்குமா என யோசிக்கும் அளவுக்கு சில படங்கள் வந்திருக்கின்றன. ஆரம்பத்தில் இருந்து மக்கள் மூடநம்பிக்கைகளுக்கு அடிமையாகியே வாழ்ந்து வருவதையும் நாம் பார்த்து இருக்கிறோம். ஒரு கட்டத்திற்கு மேலாக அந்த மூடநம்பிக்கைகளை உடைத்து எரியும் சில படங்களையும் நாம் பார்த்திருக்கிறோம். இதைப் பற்றி பிரபல எழுத்தாளரும் நடிகருமான ஜி எம் குமார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

கம்யூனிசம் சார்ந்த படங்கள்: குறிப்பாக தற்போது உள்ள சினிமா காதலை பெருமைப்படுத்தும் விதமாக அதில் உள்ள ரொமான்ஸை பெருமைப்படுத்தும் விதமாகத்தான் பல படங்கள் வருகிறது. அதை பார்த்து சிறுவர்கள் ஒருவகையில் பாதிக்கப்படுகின்றனர். இதைப் பற்றி ஜிஎம் குமார் கூறும் பொழுது இப்பொழுது வருகின்ற கதைகள் இரண்டு அம்சங்களை அடிப்படையாக வைத்து தான் வருகின்றது. ஒன்று வேத இந்து மதத்தை அடிப்படையாக வைத்தும் இன்னொன்று அதற்கு எதிராகவும் இப்படித்தான் வருகின்றன. அதாவது கம்யூனிசம் சார்ந்த படங்கள் வேத இந்து மதத்திற்கு எதிராக தான் வருகின்றனர்.


ஜனாதனம்: சமீப காலமாக ஜனாதனம் என்ற ஒரு கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது .ஆனால் இன்று நாம் அனைவருமே அந்த ஜனாதனத்திற்கு கட்டுப்பட்டு தான் நம்மை அறியாமலேயே நடந்து கொள்கிறோம். தீபாவளியை யாரும் கொண்டாடாமல் இல்லை .ஆயுத பூஜை இதெல்லாம் நாம் கொண்டாட வேண்டிய பண்டிகைகளே இல்லை. ஆனால் ஏதோ ஒரு வகையில் அதற்கு நாம் கட்டுப்பட்டு இருக்கிறோம். ஏன் ஒரு கல்யாண வீட்டில் ஐயர் இல்லாமல் கல்யாணம் நடப்பதில்லை. அதேபோல் ஒருவர் இறந்து விட்டால் அங்கும் ஐயர் இல்லாமல் எந்த காரியமும் நடப்பதில்லை.

காதலில் லிமிட்டேஷன்ஸ்: இதற்கு எதிராக நாம் பேசினாலும் ஐயர் இல்லாமல் எதுவுமே நாம் பண்ண மாட்டோம். ஆனால் இதற்கு எதிராக ஒரு குரூப் அதாவது கம்யூனிசம், இது தவறு ,ஜாதி இல்லை மதம் இல்லை இதை சொல்லிக்கொண்டே இருக்கும் . இந்த இரண்டு விதமான கான்செப்டை வைத்து நாம் கதையை பண்ணுகிறோம். அப்போ காதலைப் பற்றி வருகிற கதைகள் எல்லாம் சும்மாவா என கேட்கும் பொழுது அதற்கும் ஜி எம் குமார் காதல் என்பது அதனுடைய தர்மாவை பொறுத்துதான் வரும். இங்கிலீஷ் படங்களில் காதல் என்பது பாலியல் ரீதியாக பெரும்பாலான காட்சிகளை வைத்திருப்பார்கள். ஆனால் அதை எல்லாம் நாம் இங்கு பார்க்க முடியாது. அதற்கு ஒரு லிமிடேஷன்ஸ் இருக்கும் .

முதல் படம் பராசக்தி: அதாவது காதை காண்பிக்கிறது மூக்கை காண்பிக்கிறது காலை காண்பிக்கிறது காலில் இருக்கும் கொலுசை காண்பிக்கிறது இதெல்லாம் என்ன என்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. காதல் சப்ஜெக்ட் என்பது என்னது? அது ஒரு உடலுறவு சம்பந்தப்பட்டது .அதை தூண்டி விட்டுக் கொண்டே இருப்பது இதெல்லாம் நம்முடைய தர்மம். இதை முதன் முதலில் மூன்றாவது பரிமாணமாக யாரும் பார்ப்பதில்லை. ஆனால் சில இயக்குனர்கள் இந்த மாதிரி கதைகளை மூன்றாவது பரிமாணமாக படங்களில் எடுத்துக்காட்டினார்கள். முதன் முதலில் இந்த மாதிரி வேதிக் தர்மாவை உடைத்த படங்களாக பராசக்தி படத்தில் காட்டினார்.


வேதிக் தர்மாவை எதிர்த்து வெளிவந்த முதல் திரைப்படம் பராசக்தி. கலைஞர் ,கிருஷ்ணன் பஞ்சு, சிவாஜி என இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம். இது ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது .அதன் பிறகு நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் கணவன் மனைவி இதில் மனைவிக்கு ஏற்கனவே ஒரு முன்னாள் காதலன் .அந்த காதலன் ஒரு மருத்துவர். ஒரு கட்டத்தில் தான் இறந்து போக போகிறேன் என அந்த கணவன் தெரிந்து கொண்ட பிறகு மனைவியிடம் அந்த மருத்துவரையே நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறுவது. இது ஒரு மூன்றாவது பரிணாமம் .

இப்படி அடுத்தடுத்து தாலியை கழட்டி வைப்பது .தன்னை விட வயது மூத்தவரை திருமணம் செய்து கொள்வது என மூன்றாவது பரிணாமத்தை கொண்ட படங்கள் வெளியாகின. அடுத்ததாக சேது படம். அந்த படத்தை முதலில் பார்க்கும் பொழுது எனக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஏன் பிடிக்கவில்லை என பலமுறை யோசித்தேன் .பார்த்தால் ஒரு சாடிஸ்டோட லவ் ஸ்டோரி. ஆனால் இந்த படம் அப்படியே போயிருந்தால் படம் சுத்தமாக பிடித்திருக்காது. கடைசியில் அவன் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போவது என்பது மூன்றாவது பரிமாணம். ஒரு சாடிஸ்ட் கிட்டயும் எமோஷன் இருக்கிறது. காதல் இருக்கிறது என்பதை காட்டிய மூன்றாவது பரிணாமத்தில் வந்த காதல் கதை தான் சேதுபடம். இவ்வாறு சினிமாவில் உள்ள பல விஷயங்களை ஜி எம் குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

Tags:    

Similar News