மைக்கேல் மதன காமராஜன்ல இதை எல்லாம் கவனிச்சீங்களா? செம மாஸா இருக்கே!
1996ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல் நடித்த சூப்பர்ஹிட் படம் மைக்கேல் மதன காமராஜன். 4 வித்தியாசமான கெட்டப்புல கலக்கி இருந்தார். இந்தப் படத்தில் நாம கவனிக்காத பல விஷயங்கள் இருக்கு. அதுக்காக படக்குழு அப்படி மெனக்கிட்டுருக்காங்க. வாங்க பார்க்கலாம்.
முற்றிலும் மாறுபட்ட 4 வேடங்கள்: இப்ப உள்ள டெக்னாலஜி அப்போ கிடையாது. ஆனா பிலிம் ரோல் இருக்குற அந்தக் காலகட்டத்துலயே கமல் 4 முற்றிலும் மாறுபட்ட வேடங்கள்ல நடிச்ச படம் மைக்கேல் மதன காமராஜன். இந்தப் படத்துல நாலு கேரக்டர்களுக்கும் நாலு விதமான குரல், மேனரிசம், பாடிலாங்குவேஜ்னு கமல் அதகளப்படுத்தி இருந்தார்.
படத்தோட கதையை முழுவதும் கதை கேளு கதை கேளு என்ற டைட்டில் சாங்குலேயே அடக்கி இருப்பாங்க. அந்தக் கதையை முழுவதும் விலாவரியா சொல்லணும்னா நாலு படம் எடுக்க வேண்டி வரும். அதனாலதான் அந்த ஒரு பாட்டுலேயே அடக்கினோம் என்கிறார் கமல்.
வித்தியாசம் காட்டிய கமல்: படத்தோட திரைக்கதை தான் பிளஸ். ரொம்ப சுவாரசியம், விறுவிறுப்பு, காமெடிக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. கிரேசி மோகன் வசனம் எழுதியுள்ளார். படத்தோட செகண்ட் ஆப்ல நாலு பேருமே மீசை, தாடியை எடுத்துருவாங்க. அப்படி இருந்தும் நாலு கேரக்டருக்கும் வித்தியாசம் காட்டி இருப்பார் கமல். அது பேசணும்னு கூட தேவையில்லை. பார்த்தாலே தெரியும்.
நமக்கு எந்த இடத்துலயுமே இது எல்லாமே கமல்தான் என்ற எண்ணமே வராத அளவுக்கு நடிச்சிருப்பாரு. இந்தப் படத்துல கமல் நாலு கேரக்டர் என்பதால பல இடங்களில் நாலு வருவது போல காட்டப்பட்டு இருக்கும். அதாவது மைக்கேல் போலீஸ்கிட்ட இருந்து தப்பிக்கிற இடத்துல கார்ல ஸ்ரீராமஜெயம்னு எழுதி இருக்கும்.
எல்லாமே நாலுதான்: அப்போ ராமாயணத்துல நாலு பிரதர்ஸ்னு சொல்வாங்க. அதே போல ராஜன் கேரக்டர் குஷ்புவிடம் அரிசியில் ஆர்ட் அதாவது தாஜ்மகால் வரைஞ்சி கிப்டா கொடுப்பாரு. அந்த தாஜ்மகால்ல இருக்குற நாலு தூண்கள்தான் அதோட அடையாளம்னு நமக்குத் தெரியும். ராஜன் ஏறிப்போற தீயணைப்பு வண்டியின் நம்பர் எம் 4.
எனக்கு நாலு தெரியுது பாஸ்: அதே போல ஊர்வசி கொடுக்குற மளிகை கடைக்கான சாமான்களின் லிஸ்ட்ல நிறைய பொருள்கள் 4 கிலோவாகத் தான் இருக்கும். பயர் சர்வீஸ்ல ராஜன் சேர்ந்த நாள் 4ம் தேதி. 1வது மாசம். 87ம் வருஷம். 2 கமல் கண்ணாடிக்கிட்ட நின்னு பார்க்கும்போது பீம் சொல்வாரு. எனக்கு நாலு தெரியுது பாஸ்னு.
கிளைமாக்ஸ் நடக்கும்போது வீட்டுக்குள்ள ஒரு வால் கிளாக் இருக்கும். அதுல மணி நாலு. கிளைமாக்ஸ்ல மலைக்கு மேல இருக்குற வீடு கீழே விழுற மாதிரி காட்சி. இதை 1925ல கோல்டு ரஷ் என்ற சார்லி சாப்ளின் படத்துல பண்ணிருப்பாங்க. அதுல 2 பேர்தான் இருப்பாங்க. ஆனா இதுல 18 பேர் இருப்பாங்க.
சாம்பார்ல மீன் விழுற சீனை ரிவர்ஸ் ஸ்க்ரீன் பிளேவுல எடுத்துருப்பாங்க. முதல்ல டயலாக் வரும். அப்புறம் சீன் வரும். அதே மாதிரி சுந்தரி நீயும் பாடல் முழுக்க ஸ்லோ மோஷன்ல எடுத்திருப்பாங்க. வழக்கமா ஒளிப்பதிவுல ஒரு செகண்ட்டுக்கு 24 பிரேம் இருக்கும். ஆனா இந்தப் பாட்டுக்கு ஒரு செகண்டுக்கு 48 பிரேம்ஸ் வச்சிருப்பாங்க.
குஷ்பு பட்ட பாடு: மாஸ்க் வச்சி டபுள் கேரக்டர்கள் எல்லாம் அழகா எடுத்திருக்காங்க. அதுக்கு சிங்கிள் டேக்ல கமலும் அருமையா நடிச்சிக் கொடுத்தாராம். கிளைமாக்ஸ்ல குஷ்புவை வச்சித்தான் மாஸ்க் எடுத்தாங்களாம். அதுக்காக அவர் 3 மணி நேரம் ஒரே இடத்துல படுத்துக்கிட்டு இருந்தாராம்.