பாண்டியனோட கடைசி ஆசை நிறைவேறல... விஜயகாந்த் எவ்வளவோ சொல்லியும் கேட்கலயே..!

By :  Sankaran
Update:2025-02-22 15:56 IST

நடிகர் பாண்டியன் மென்மையான ஒரு ஹீரோ. அப்புறம் வில்லன், குணச்சித்திர நடிகர்னு வலம் வந்தார். இவரை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. முதல் படம் மண்வாசனை. யதார்த்தமான நடிப்புல கெத்து காட்டினார். அந்த வகையில் அவரது மகன் ரகு தந்தை மற்றும் விஜயகாந்தைப் பற்றி என்ன சொல்கிறார்னு பாருங்க.

பந்தயக்குதிரை: படம் நிறைய பண்ணனும்னு ஆசைப்பட்டேன். சின்ன வயசுலயே எங்க அப்பா கூட பண்ணனும்னு ஆசைப்பட்டேன். பந்தயக்குதிரைன்னு ஒரு படத்தைத் தயாரிச்சாரு. அந்தப்படத்துல ஒரு சீன் என்னை நடிக்க வைக்கிறேன்னாரு. அந்தப் படம் பைனான்ஸ் பிரச்சனைல வெளியே வரல. அந்தப் படத்துல எங்க அப்பாவோட ஹேர் ஸ்டைல் வேற மாதிரி இருந்தது. மேலே ஏற்றி அனில்கபூர் மாதிரி சீவி இருப்பாரு. ரொம்ப பிடிச்சிருந்தது.

விஜயகாந்த் பெரியப்பா: அப்பாவுக்கு என்னை ஆக்டர் ஆக்கி நடிக்க வைக்க முடியல. விஜயகாந்த் பெரியப்பா எங்க அப்பாகிட்ட கேட்டாரு. இவனை இப்பவே நடிக்க வைக்கலாமேன்னு கேட்டாரு. அப்போ நான் 3வது வகுப்பு படிச்சேன். இவனை சின்ன வயசிலயே நடிக்க வைன்னு சொன்னாரு. ஆனா எங்க அப்பா டிகிரி கம்ப்ளீட் பண்ணட்டும். அதுக்கு அப்புறம் பார்க்கலாம்னு சொன்னாரு.


நல்ல மனசு: எங்க அப்பா என்னை ஹீரோவாக்கிப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாரு. சின்ன வயசிலேயே நிறைய நாடகத்துல நடிக்க அழைப்பு வந்தது. ஆனா என்னன்னு தெரியல. அப்பா நடிக்க வைக்கல. விஜயகாந்த் பெரியப்பாவுக்கு நல்ல மனசு. அப்பாவுக்கு நல்ல ஒரு அண்ணன். பக்கபலமா இருந்தாரு. எனக்கு நிறைய ஐடியா சொன்னாரு. நல்ல ஆதரவா இருந்தாரு. எப்படி இருக்கணும், படம் வந்தா எப்படி நடிக்கணும், ரியலாவே நடிக்கணும்னு சொன்னாரு.

நாலஞ்சு படம்: விஜயகாந்தும், அப்பாவும் உண்மையிலேயே அண்ணன், தம்பி பிறந்தா கூட இந்தளவுக்கு இருக்க மாட்டாங்க. குரு சிஷ்யன் மாதிரி. தர்மத்தின் தலைவன் படத்துல வர்ற பிரபு, ரஜினி சார் மாதிரி இருந்தாங்க. நாலஞ்சு படம் சேர்ந்து நடிச்சிருக்காங்க. ரெண்டு பேருக்கும் லுக், ஹேர் ஸ்டைல், கண்ணால பேசுறது எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும். எங்க அப்பாவை அடுத்த விஜயகாந்து சார்னு சொல்லலாம். பெரியப்பான்னு சொல்லலாம். நிறைய படங்களுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்துருக்காரு.

எனக்கே தோணுச்சு: அப்பா கடைசியா என்னை நடிகராக்கணும்னு நினைச்சாரு. லிவர் ஆபரேஷன் நடந்தது. ஆரம்பத்துல அவரை எப்படியாவது காப்பாத்தணும். கோடிக்கணக்குல செலவு பண்ணனும்னுதான் நினைச்சேன். 3தடவை அவரைக் காப்பாத்திட்டேன். நாலாவது தடவை அவரு இறந்துருவாருன்னு எனக்கே தோணுச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News