அந்த படத்துல ஜாலியா நடிச்சதுக்கு இவர்தான் காரணம்.. விஜய் சொன்ன நடிகர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரு நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் இருந்து இப்போது அவர் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் வரை மக்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதுவரை அவர் வித்தியாசமான கெட்டப் போட்டுக்கொண்டு எந்த படத்திலும் நடித்ததில்லை.
அவருடைய டான்ஸ் ஹியூமர் இவைகளுக்காகவே அவருடைய பல திரைப்படங்கள் ஓடி இருக்கின்றன. ரஜினியைப் போலவே அடிப்படையில் விஜயும் ஒரு ஹியூமர் சென்ஸ் அதிகமாகவே இருக்கும் நடிகர். அதனாலேயே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் நடிகராக காணப்படுகிறார் விஜய். சீரியஸான ரோல் காமெடி ரோல் சென்டிமென்ட் ஆன ரோல் என எந்த ரோலிலும் அசால்ட் ஆக நடித்து முடித்து விடுபவர் விஜய்.
இந்த நிலையில் முற்றிலும் காமெடி கதாபாத்திரத்திலேயே நடித்து சூப்பர் ஹிட் திரைப்படமான நண்பன் திரைப்படத்தைப் பற்றி நடிகர் ஜீவா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். சங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ஒரே திரைப்படம் நண்பன். அந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து ஜீவா ,ஸ்ரீகாந்த் என மூன்று ஹீரோ சப்ஜெக்ட் உள்ள திரைப்படம் தான் நண்பன். முழுக்க முழுக்க காமெடியில் ட்ரை செய்து படமும் வெற்றிகரமாக ஓடியது .
இதுவரை இல்லாத ஒரு விஜயை இந்த படத்தில் பார்த்திருப்போம். இந்த படத்தில் விஜய் மிகவும் ஜாலியாக சந்தோஷமாக நடித்தார் என்றால் அதற்கு ஒரே காரணம் ஜீவா தான் என விஜயே கூறியதாக ஜீவா ஒரு பேட்டியில் கூறினார். லியோ திரைப்படத்தின் போது லோகேஷ் கனகராஜிடம் விஜய் ஜீவாவை அறிமுகம் செய்து நண்பன் திரைப்படத்தில் நான் ஜாலியாக நடித்தேன் என்றால் அதற்கு ஒரே காரணம் ஜீவா தான் என கூறினாராம்.
நண்பன் திரைப்படத்தை பற்றி கூறும் போதெல்லாம் இதை மறக்காமல் சொல்லிவிடுவாராம் விஜய். அந்த அளவுக்கு அந்தப் படத்தின் போது எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு அதுவும் ஜாலியான நட்பு உருவானது என ஜீவா கூறினார். அதைப்போல மீண்டும் நண்பன் திரைப்படம் மாதிரி எப்போது ஒரு திரைப்படத்தை நாம் பண்ண போகிறோம் என்றும் விஜயின் புகைப்படத்தை பார்த்து கேட்டிருக்கிறார் ஜீவா.