விஸ்வரூபம் படத்தில் கமலின் கதாபாத்திரம் எங்கிருந்து சுட்டது தெரியுமா?!.. ஆச்சர்ய தகவல்!...
Vishwaroopam : கமல் இயக்கி நடித்த திரைப்படம்தான் விஸ்வரூபம். இந்திய உளவுத்துறை அதிகாரியான கமல் அமெரிக்காவில் மனைவியுடன் வசிப்பார். ஒரு பெண் போல பாவனைகளை செய்யும் நபராகவும், பரதநாட்டிய ஆசிரியர் போலவும் வேலை செய்து கொண்டிருப்பார். அவர் அப்படி இருப்பது அவரின் மனைவிக்கே பிடிக்காது.
எனவே, வேறொரு ஆணுடன் தொடர்பில் இருப்பார். இதற்கிடையில் பாகிஸ்தானை சேர்ந்த சிலர் அமெரிக்காவில் குண்டு வைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அந்த கும்பலிடமும் கமலும், அவரின் மனைவியும் சிக்கி கொள்வார்கள். அவர்களிடம் மாட்டிகொண்ட கமல் திடீரென விஸ்வரூபம் எடுப்பார்.
கமல் யார்?.. அவரின் பின்னனி என்ன?.. தீவிரவாதிகளை அவர் களையெடுத்தாரா இல்லையா என்பதை படம் விவரிக்கும். ஒளிப்பதிவு, நடிப்பு, மேக்கிங் என இந்த படத்தை ஹாலிவுட் படம் போல எடுத்திருப்பார் கமல். இந்த படம் உருவாகி ரிலீஸ் சமயத்தில் இஸ்லாமியர்களை இந்த படம் தவறாக சித்தரிப்பதாக கூறி போராட்டம் நடத்தப்பட்டது.
ஆனால், படத்தை பார்க்காமலேயே தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் என கமல் விளக்கம் அளித்தார். ஆனாலும், இந்த படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்தது. இதனால், 2 நாட்கள் படம் ரிலீஸாகவே இல்லை. இதனால், கமல் தனது சொத்துக்களை விற்கும் நிலைக்கு போனார். மேலும் ‘இந்தியாவை விட்டே வெளியேறுவேன்’ என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன்பின் ஒருவழியாக படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் வரும் கமலின் கதாபாத்திரம் வேறொரு பெயரில் பெண் போல பாவனை செய்யும் வேடத்தில் இருப்பது போல கமல் காட்டியிருப்பார். அதற்கு பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. மகாபாரதத்தில் விராட பர்வம் என்கிற பகுதி இருக்கிறது.
அதில், விராட தேசம் அதாவது இப்போதுள்ள தென் இந்தியாவில் பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் தலைமறைவாக வெவ்வேறு வேஷத்தில் வாழ்ந்து வருவார்கள். அதில் அர்ச்சுனன் ஒரு திருநங்கை வேடத்தில் அந்த தேசத்து ராணிக்கு நாட்டியம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையாக இருப்பார். ஒருகட்டத்தில் அங்கு போர் ஏற்படும்போது அர்ச்சுனன் தனது வேஷத்தை கலைத்துவிட்டு விஸ்வரூபம் எடுப்பது போல காட்சி வரும். இந்த இன்ஸ்பிரேசனில்தான் கமல் தனது வேடத்தை அர்ச்சுனனுடன் கனெக்ட் செய்வது போல டிசைன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.