எம்ஜிஆரோட கருப்பு கண்ணாடி ரகசியம்!... இப்படி லீக் பண்ணிட்டாரே பார்த்திபன்!,,

By :  Sankaran
Update:2025-02-22 13:47 IST

சினிமாவைத் தாண்டி புரட்சித்தலைவர் எம்ஜிஆரை நாம் பார்த்தால் வெள்ளைத் தொப்பியும், அந்தக் கருப்பு கண்ணாடியும்தான் நம் நினைவுக்கு வரும். அதில் அட்டகாசமாக இருப்பார். 'ஏழைகளின் பொன்மனச் செம்மல்' அவர்தான். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் என்று சொன்னாலும் மிகையில்லை.

எம்ஜிஆர் வாழ்கிறார்: அவரது படங்களில் எப்படி நல்ல கருத்துகளை மக்களுக்குச் சொல்லி, ஏழைகளுக்கு எல்லாம் உதவுவாரோ, அதையே முதல்வர் ஆனதும் நிரூபித்து சாத்தியம் ஆக்கினார். மக்கள் அவரை வாயார வாழ்த்தினர். அதனால்தான் மருத்துவமனையில் இருந்தபோதும்கூட தேர்தலில் நின்று ஜெயித்தார். அவர் மறைந்தும் இன்றும் தன் நினைவுகளோடு மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

எம்ஜிஆர் கருப்பு கண்ணாடி அணிந்தது ஏன் என்று நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் தெரிவித்துள்ளார்.


கருப்பு கண்ணாடி: எம்ஜிஆர் சார்கிட்ட எனக்கு சிவாஜியோடு நடிக்கிற வாய்ப்பு கிடைக்கல. ஒரு தடவை மட்டும் ராமாவரம் தோட்டத்துக்குப் போகும்போது டைரக்டரோடு சேர்ந்து நான் உள்ளே போயிட்டேன். அவரு அந்தக் கருப்பு கண்ணாடி வழியா என்னைப் பார்க்குறது தெரியுது. யாரு இவன் தேவையில்லாத ஆளு. உள்ளே வந்துட்டானேன்னு பார்க்குறாரு.

ஷார்ப் லுக்: வெறும் பார்வையில் மட்டுமே தெரியுது. அது எனக்கு அப்படியே தெரியுது. அப்படி ஒரு ஷார்ப் லுக். நான் பின்னாடியே நிக்கிறேன். அப்புறம் டைரக்டர் திரும்பிப் பார்த்துட்டு நம்ம அசிஸ்டண்ட் தான்னாரு. அவ்ளோதான். அதுக்கு மேல எனக்குத் தெரியாது. இதை வந்து நான் பிற்காலத்துல தெரிஞ்சிக்கிட்டேன்.

எதிராளிக்குத் தெரியக்கூடாது: அவருக்கு ஒரு ஜோசியர் சொல்லி இருக்காராம். அவரு கண்ணு ரொம்ப வெளிப்படுத்தும் திறன் கொண்டதாம். அதனால நீங்க கண்டிப்பா கண்ணாடி போட்டு மறைச்சே தீரணும். நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எதிராளிக்குத் தெரியக்கூடாது.

அவரு நிறைய பத்மவியூகம் எல்லாம் வச்சிருப்பாரு. அதனால தன் கண் மூலமா தான் என்ன நினைக்கிறோம்கறது எதிராளிக்குத் தெரியக்கூடாதுங்கறதுக்காகத் தான் கருப்பு கண்ணாடி போட ஆரம்பிச்சதா சொல்வாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News