அண்ணிக்கு வந்த கூட்டம் தங்கவேலுவுக்கு இல்லையே...! நகைச்சுவை ஜாம்பவானுக்கே இந்த நிலைமையா?

By :  Sankaran
Update: 2024-12-28 12:00 GMT

நகைச்சுவை கே.ஏ.தங்கவேலு ஒருகாலகட்டத்தில் பரபரப்பாக இருந்த நடிகர். இவரை எல்லாம் ஒரு நாளைக்கே 3ல இருந்து 4 படங்கள் வரை நடிப்பார். அப்படி அவர் பிசியாக இருந்த நேரம் அவரது அண்ணன் மனைவி இறந்து போனார். அப்போது அங்கு வந்து இருந்தது கட்டுக்கடங்காத கூட்டம். அவரது அண்ணியைப் பற்றி அறியாதவர்கள் எல்லாம் வந்து இருந்தாங்க.

இதுகுறித்து அந்த நிகழ்ச்சிக்குச் சென்று இருந்த பிரபல தயாரிப்பாளர் முகைதீனின் மகன் ஹபிபுல்லா குறிப்பிட்டு இருந்தார். இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்னால் 1994ல் ஹபிபுல்லா பாண்டிபஜார் பக்கம் சென்ற போது கே.ஏ.தங்கவேலு இறந்துவிட்டார் என்ற சேதி அவருக்குத் தெரிய வந்தது.

அதைத் தெரிந்ததுமே உடனடியாகத் தங்கவேலு வீட்டிற்கு சென்றார் ஹபிபுல்லா. அவரது தந்தையான முகைதீன் சோமசுந்தரத்துடன் இணைந்து ஜூபிடர்ஸ் நிறுவனத்தின் பல படங்களில் கே.ஏ.தங்கவேலு நடித்துள்ளார்.

அதனால அவருடன் நல்ல பழக்கம் ஹபிபுல்லாவுக்கு உண்டு. கே.ஏ.தங்கவேலு இறந்த செய்தி தந்த அதிர்ச்சியை விட அவர் வீட்டுக்குச் சென்று பார்த்த போது அங்கு இருந்த சூழ்நிலை தான் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி என்கிறார்.

கே.ஏ.தங்கவேலுவின் அண்ணி இறந்ததுக்கே ஆயிரக்கணக்கான பேரு அங்கு கூடி இருந்ததால அதைவிட பெரிய கூட்டம் அங்கே இருக்கும்னுதான் நினைச்சிக்கிட்டுப் போனாராம் ஹபிபுல்லா.

ஆனா அங்கே கூடியிருந்தவரைப் பார்த்தீங்கன்னா 30ல இருந்து 40 பேர் தானாம். இதுக்கு முக்கியமான காரணம் என்னன்னா 90களில் தங்கவேலுவுக்குப் படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. 92, 93, 94ம் ஆண்டுகளில் அவர் நடித்த படங்கள் ஒன்றிரண்டுதான்.


ஒரு நடிகனுடைய பட வாய்ப்புகள் குறைந்தால் அந்த நடிகனைத் திரையுலகம் எப்படி பார்க்கிறது என்பதை கண்கூடாகப் பார்க்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்று ஹபிபுல்லா ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News