முரளி பண்ண பிரச்சினை.. அந்தப் படத்தில் தேவயாணிக்கு வந்த சிக்கல்
தயாரிப்பில் இறங்கிய தேவயாணி: தேவயாணி தயாரித்த ஒரு படத்தில் முரளியால் என்னெல்லாம் கஷ்டத்தை அவர் சந்தித்தார் என தேவயாணியின் கணவர் ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதோ அவர் கூறியது இதோ: தேவயானியை திருமணம் செய்து கொண்ட பிறகுதான் ராஜகுமாரன் முதன் முதலில் தயாரிப்பில் இறங்குகிறார். அந்த வகையில் முரளி மற்றும் தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த காதலுடன் என்ற திரைப்படத்தை தேவயானி பெயரில்தான் ராஜகுமாரன் தயாரித்தார் .தேவயானியை பொருத்தவரைக்கும் நாலு பேருக்கு சம்பளம் கொடுக்கிறோம் என்பதில் மிகவும் சந்தோஷப்படுவார். இப்பொழுதும் படங்களை தயாரிக்க ரெடி ஆகத்தான் இருக்கிறோம்.
அக்ரிமெண்டில் பிரச்சினை: நாங்கள் தயாரிப்பில் இறங்குவதற்கு ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் அதாவது சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் உதவி செய்தார்கள். அதிலும் சில சங்கடங்கள் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது .நடிகர் முரளியால் ஏகப்பட்ட பிரச்சனை வந்திருக்கிறது. இருந்தாலும் மறுபடியும் அந்த படத்தை எடுத்தோம் .சீரியல் கூட எடுத்தோம். படம் ஒரு பக்கம் முடிந்தாலும் இடையில் முரளி மிகவும் தொந்தரவு செய்து இருக்கிறார். 20 லட்சம் சம்பளம் பேசினோம்.
40 லட்சம் சம்பளம்: ஆனால் அக்ரீமெண்ட் எதுவுமே கையெழுத்தில்லாமல் வெறும் வார்த்தையில் 20 லட்சம் என பேசி நடிகர் முரளியை ஒப்பந்தம் செய்தோம். ஆனால் கடைசியில் 40 லட்சம் சம்பளம். மீதி 20 லட்சத்துக்கு கோவை ஏரியாவை கொடுங்க. அதுவும் திருப்பூர் சுப்ரமணியத்திற்கு கொடுங்க. அவருக்கு நான் கொடுக்க வேண்டிய பணத்திற்கு சரியாக போய்விடும் என முரளி கூறினார். திருப்பூர் சுப்பிரமணியனும் என்னை தொலைபேசியில் அழைத்து முரளிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எனக்கு கொடுத்து விடுங்கள் என எழுதி ஒப்பந்தமாக வாங்கி விட்டார்கள்.
வினியோகஸ்தர்கள் தகராறு; இதனால் எனக்கு மிகவும் சூழ் நிலை கஷ்டமானது. இது எல்லாம் முடிந்தும் முரளி அந்த படத்தில் டப்பிங் பேசாமல் நாள்களை இழுத்தடித்தார். நவம்பரில் வெளியாக வேண்டிய திரைப்படம் இரண்டு மூன்று மாதங்கள் கழிந்து தான் ரிலீஸ் ஆனது. ரிலீசுக்கு பிறகு சில இடங்களில் அந்தப் படம் ஓடவில்லை என விநியோகஸ்தர்கள் பணம் கேட்டார்கள். அதை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து சரி செய்து விட்டோம். மொத்த சினிமா துறையும் இந்த படத்தை வெளியிடாமல் தடுக்க என்னலாம் பண்ண வேண்டுமோ அதை எல்லாம் செய்தார்கள்.
சரத்குமார் அறிக்கை: அப்போது நடிகர் சங்க தலைவராக சரத்குமார் இருந்தார். பிப்ரவரி 7ஆம் தேதி ரிலீஸ் .அப்போது சரத்குமார் லெட்டர் எழுதி இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என அறிக்கை கொடுத்தார். ஏனெனில் அனைவருமே முரளிக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். தேவயானிக்கு எதிராக அனைவரும் இருந்தார்கள். இதுதான் உண்மை. இன்றைய சூழலில் இன்னும் நாங்கள் அதே சினிமா துறையில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
ராஜகுமாரன் இருக்கிறார். தேவயானியும் இருந்து கொண்டு தான் இருக்கிறார் .எப்படி இருந்தாலும் எங்களுக்கு எதிராக இருந்தவர்களை இன்னும் நாங்கள் மரியாதை கொடுத்து தான் வருகிறோம். அந்த நேரத்தில் சரத்குமார் அப்படி செய்தார். அது அவருடைய சூழல் என்றுதான் இதை நாங்கள் கடந்து விட்டோம் என ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.