இவன் யாரு எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்க?!.. ஷூட்டிங்கில் கடுப்பான கமல்ஹாசன்!..
Kamalhaasan: 5 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். 18 வயதுக்கு பின் பாலச்சந்தரின் படங்களில் நடிக்க துவங்கினார். எல்லாமே வித்தியாசமான வேடங்கள். எனவே, நடிப்பில் தன்னை மெருகேற்றிக்கொண்டார். அப்போது திறமையான இயக்குனர்களின் படங்களில் நடித்தார். ரஜினியுடன் இணைந்தும் சில படங்களில் நடித்தார்.
அதன்பின் இருவரும் தனித்தனியாக நடிக்க துவங்கினார்கள். ரஜினி கமர்ஷியல் படங்களில் நடித்தால் கமலோ தமிழ் சினிமாவை ஒரு படி மேலே கொண்டு செல்லும் புது முயற்சிகளை செய்து பார்த்தார். 100வது படமாக ஒரு கமர்ஷியல் படத்தில் நடிக்காமல் ராஜபார்வை படத்தில் நடித்தார்.
பரிசோதனை முயற்சிகள்: அதேபோல், படம் முழுக்க ஒரு வசனம் கூட பேசாமல் ‘பேசும் படம்’ படத்தில் நடித்தார். அபூர்வ சகோதரார்கள், மைக்கேல் மதன காமராஜன், நாயகன், குணா, மகாநதி, குருதிப்புனல், தேவர் மகன், ஹே ராம், விஸ்வரூபம், தசாவதாரம் என தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகளை செய்தவர் கமல்ஹாசன்.
விக்ரம்: அதனால்தான் தமிழ் சினிமாவில் அவருக்கு முக்கிய இடம் இருக்கிறது. விஸ்வரூபம் 2-வுக்கு பின் 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த கமல் லோகேஷுடன் கூட்டணி அமைத்து விக்ரம் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். கமலுக்கு நடிப்பை சொல்லி கொடுக்க தேவையில்லை. தனக்கு என்ன வேண்டும் என்பதை அவரிடம் இயக்குனர் சொன்னால் போதும். அதை விட சிறப்பாக நடித்து விடுவார்.
வேட்டையாடு விளையாடு: கமலை வைத்து கவுதம் மேனன் இயக்கிய படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக ஜோதிகாவும், வில்லனாக டேனியல் பாலாஜி நடித்திருந்தார். இந்த படம் கமலுக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் கமல் நடிக்க துவங்கிய போது அவருக்கு எதுவும் செட் ஆகவில்லை. கவுதம் மேனன் மீதே நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கிறார். எனவே, சரியான ஒத்துழைப்பை அவர் கொடுக்கவில்லையாம்.
ஒரு காட்சியை விளக்கும்போது உடல் அசைவுகளுடன் சொல்லி கொடுத்திருக்கிறார் கவுதம் மேனன். இது கமலுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஷூட்டிங்கில் இருந்த ஒருவரிடம் ‘அவன் யாரு எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்க?’ என கேட்டிருக்கிறார். இது கவுதம் மேனன் காதில் விழ அப்போதிலிருந்து கமலிடம் என்ன காட்சி என சொல்வதோடு நிறுத்திக்கொண்டாராம்.