விஜய்க்கு போட்ட கண்டீசன்.. அதான் படத்துல வொர்க் அவுட் ஆச்சு.. பிரபலம் சொன்ன தகவல்
கட்சி தலைவர் விஜய்: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது அரசியலில் கில்லி மாதிரி விளையாடிக் கொண்டு இருக்கிறார். அரசியல் களத்தில் விஜயின் பெயர்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் மற்ற கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விஜயின் தவெக கட்சிக்கு மாறுவதும் ஒரு வித அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. விஜயும் தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைக்கிறார்.
நாளைய தீர்ப்பு: இன்னொரு பக்கம் விஜய் அவருடைய 69வது படத்திலும் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு ஜன நாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் ஒரு தரமான அரசியலை பேசும் படமாகவும் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் பேமிலி ஆடியன்ஸ்களை தன் வசப்படுத்தி வந்த விஜய் இப்போது ஒட்டுமொத்த தமிழ் நாட்டையும் தன் வசப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
கில்லி அனுபவம்: இந்த நிலையில் விஜய் நடித்து பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த படமான கில்லி படத்தை பற்றியும் அதில் நடித்த விஜயை பற்றியும் கில்லி படத்தின் சினிமாட்டோகிராஃபர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் நடிக்கிறார் என்று உறுதியானதும் விஜயை பார்க்க அந்த சினிமாட்டோகிராஃபர் சென்றாராம். போன உடனேயே விஜயிடம் சில கண்டீசன்களை போட்டிருக்கிறார்.
அதாவது இந்தப் படத்தில் உங்களுக்கு மேக்கப் கிடையாது. மேலும் இது கபடி விளையாட்டை மையப்படுத்தி இருக்கும் படம் என்பதால் தரையில் விழுந்து புரளும் மாதிரி இருக்கும். அதற்காக மணல் போன்ற சில விஷயங்களை உங்கள் மீது வைக்க வேண்டியிருக்கும். அதற்காக உண்மையான மணலை பயன்படுத்த மாட்டோம். ஆர்ட் இயக்குனரிடம் சொல்லி அதற்கான வேலையை பண்ணிவிட சொல்லிருவேன் என்றெல்லாம் கூறினாராம்.
ஆனால் இது எல்லாவற்றிற்கும் விஜய் ஓகே ஓகே என்றுதான் சொல்லியிருக்கிறார். எந்தவித மறுப்பும் சொல்லவில்லையாம். மேலும் படத்தில் ஆஷிஸ் வித்யார்த்தி நடித்ததும் இந்த சினிமாட்டோகிராஃபர் மூலமாகத்தானாம். இப்படி எல்லாம் இருந்தால்தான் அந்த எதார்த்தம் படத்தில் வரும் என்று சினிமாட்டோகிராஃப்ர் கூறினார்.