ஹீல்ஸ் போட்டு வந்த ராதிகா.. ராத்திரியே பொட்டிய தூக்கிட்டு கிளம்பிட்டாங்க! ஏன்னு தெரியுமா?
முன்னணி நடிகை: 80களில் தன்னுடைய நடிப்பாலும் சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமான ராதிகா முதல் படத்திலேயே தன்னுடைய அற்புதமான நடிப்பால் தமிழ் ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்தார். இவரை இந்த சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது பாரதிராஜா .ராதிகா எப்படி சினிமாவிற்குள் வந்தார்? கிழக்கே போகும் ரயில் படத்தில் ஹீரோயின் ஆனது எப்படி என்பதை பற்றி பாரதிராஜா பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். அது மிகவும் சுவாரஸ்யமானது.
இவர் ஹீரோயினா?: இந்த படத்தில் பாக்கியராஜ் நடித்திருப்பார். முதலில் ஹீரோயினாக யாரை போடலாம் என தேடிக் கொண்டிருந்த பொழுது ராதிகாவை பிடித்து படப்பிடிப்பில் வந்த நிறுத்தி இருக்கிறார் பாரதிராஜா. லண்டனில் படித்து அப்பொழுதுதான் சென்னைக்கு வந்திருந்தார் ராதிகா. ஆரம்பத்தில் கருமையான நிறம் கொண்டவர். குண்டான உடல் எடையும் கொண்டவர். இவரை பார்த்ததும் பாக்கியராஜ் இவரா இந்த படத்திற்கு ஹீரோயின் என நக்கலாக கேட்டாராம்.
லண்டன் ரிட்டர்ன்: அனைவருக்கும் இப்படி ஒரு ஹீரோயினா என ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கிறது .ஆனால் அந்த படத்தில் அவருடைய நடிப்பு எந்த அளவுக்கு மிரட்டியது என அதன் பிறகு தான் அனைவருக்கும் புரிந்தது .அந்த படத்திற்கு நடனம் அமைத்துக் கொடுத்தவர் புலியூர் சரோஜா. அதில் ஒரு பாடலில் ராதிகா பரதநாட்டியம் உடை அணிந்து ஆடுவது போல படமாக்கி இருப்பார்கள். லண்டனில் இருந்து வந்தவர் என்பதால் மிகவும் ஸ்டைலாக அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ் செருப்புடன் வந்து இறங்கி இருக்கிறார்.
படப்பிடிப்பில் இருந்து கிளம்பிய ராதிகா:ஆனால் அந்த பாடலில் நடனத்திற்கான பயிற்சி கொடுத்த போது அவருடைய கால்கள் மிகவும் வலித்து விட்டதாம் .அதனால் அன்று இரவே தன்னுடைய அம்மாவையும் அழைத்துக் கொண்டு, தான் கொண்டு வந்த பெட்டியையும் எடுத்துக்கொண்டு நான் திரும்பிப் போகிறேன் என கிளம்பி விட்டாராம் ராதிகா. போனவரை திரும்பி அழைத்து வந்து புலியூர் சரோஜா இந்த நடனத்திற்கான காஸ்ட்யூம் டிரஸ் இதுதான் என பரதநாட்டியம் உடையை காட்டி இருக்கிறார்.
அதை பார்த்ததுமே ராதிகாவுக்கு பிடித்து விட்டதாம். சரி நான் ஆடுகிறேன் என சொல்லி இருக்கிறார். அதன் பிறகு ராதிகாவின் அம்மா அவருடைய காலுக்கு தைலம் எல்லாம் தேய்த்து அவருடைய காலை எல்லாம் பிடித்து விட்டு அப்படி தான் அந்த பாடல் காட்சியை படமாக்கினோம் என புலியூர் சரோஜா கூறினார். அதன் பிறகு ராதிகா இந்த தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட ஒரு நடிகையாக மாறினார் என்பது அனைவருக்குமே தெரியும் .
ரஜினி கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து மக்கள் மத்தியில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். நடிப்பின் இளவரசி என்று அவரை அழைக்கின்றனர் .சமீபகாலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக தான் ராதிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.