சாதிக்கணும்கற வெறி வரக்காரணமே அந்த வார்த்தைகள்தான்!.. யாரை சொல்கிறார் இளையராஜா?..
இளையராஜாவின் மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் பல கம்யூனிஸ்ட் மேடைகளில் பாட்டுக் கச்சேரி நடத்தியவர். அப்படி பாட்டுக்கச்சேரி நடத்தியபோது பாவலர் சகோதரர்களான இளையராஜா, கங்கை அமரன் எல்லோரும் கம்யூனிஸ்ட் பேச்சாளர்களோடு ஒரே வீட்டுல தான் தங்கி இருப்பாங்க.
பழக்கம்: அன்றைய காலகட்டத்திலே இலக்கியவாதியான ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் மேடைகளிலே தீவிரமாக முழங்கிக் கொண்டு இருந்தார். அதனால் அவரோடு மிக நெருக்கமாக பழகுற பழக்கம் பாவலர் சகோதரர்களுக்கு ஏற்பட்டது.
ஜெயகாந்தனைப் பொருத்தவரைக்கும் அவர் ஒரு இலக்கியவாதியா மட்டும் இல்லை. திரைத்துறையிலும் பலரோடு அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது. அதனால அவரை சந்தித்தால் நிச்சயமா சினிமாவுல வாய்ப்பு கிடைக்கும்னு இளையராஜாவும், பாரதிராஜாவும் நம்பினாங்க.
வித்தியாசமான ஒரு அனுபவம்: அந்த நம்பிக்கையில் இருவரும் சென்னைக்குச் சென்றதும் முதன்முதலாக ஜெயகாந்தனைச் சந்திக்கச் சென்றனர். அந்த சந்திப்பு வித்தியாசமான ஒரு அனுபவத்தைத் தரப்போகிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது.
ஜெயகாந்தனைச் சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குப் போன உடனே உங்களை நம்பித்தான் சென்னைக்கு வந்திருக்கிறோம் தோழர்னு இளையராஜா சொன்னாராம். அவர் அப்படி சொன்னதுதான் தாமதம். ஜெயகாந்தனின் முகம் இன்னும் கொஞ்சம் இறுகியது.
என்னை நம்பியா வந்துருக்கீங்க?: என்னுடைய அனுமதி இல்லாம என்னை நம்பி நீங்க எப்படி வரலாம்? நீங்க உங்களை நம்பணும்னு ஆவேசமாகச் சொன்னாராம் ஜெயகாந்தன். அவர் அப்படிச் சொன்னதும் எங்களுக்கு சப்தநாடியும் அடங்கிடுச்சு. வெளியே வந்ததும் பாரதிராஜா, என்னய்யா இப்படிச் சொல்லிட்டாரு? ஒப்புக்காவது அப்படியா என்னை நம்பியா வந்துருக்கீங்கன்னு கேட்டுருக்கலாம்.
ஜெயகாந்தனின் பங்கு: எதிர்க்கட்சியைத் தாளிக்கிற மாதிரி நம்மளைத் தாளிச்சிட்டாரேன்னு சொல்லிருக்கிறார். பாரதிராஜா அப்படி சொன்னது உண்மைதான் என்றாலும் நான் சினிமாவுக்கு வந்ததுல ஜெயகாந்தனின் பங்கும் இருக்குன்னுதான் நான் நம்புறேன். அவரு அன்னைக்கு அப்படி சொன்ன அந்த வார்த்தைகள் என்னை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தன.
சினிமாவிலே எதையாவது சாதிக்கணும்கற வெறியை என்னுள் ஏற்படுத்தியது அந்த வார்த்தைகள்தான்னு ஒரு கட்டுரையிலே இளையராஜா பதிவு செய்துள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.