குஷ்புவோடு நடிப்பதை விரும்பாத பிரபு மனைவி... இயக்குனரிடம் சொன்னது இதுதான்!

By :  Sankaran
Update:2025-02-23 16:20 IST

தமிழ்சினிமாவில் குடும்பப்பாங்கான அம்சமுள்ள திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் வி.சேகர். இவரது படங்களுக்கு தாய்மார்களின் பேராதரவு உண்டு. அந்த வகையில் பிரபுவின் படம் ஒன்றில் குஷ்பு நடிப்பதாக இருந்தது. அது பிரபுவின் மனைவிக்குப் பிடிக்கவில்லை. அவர் இயக்குனரிடம் என்ன சொன்னாருன்னு பார்க்கலாமா...

சின்னதம்பி: நான் டைரக்டர் ஆன பிறகு பிரபுவை வச்சி படம் எடுக்க முடியல. பிரபு எங்கிட்ட கேட்குறாரு. 'என்ன பிரதர். நீ அப்பாவுக்கு ரசிகராமே. எங்க வீட்டுல இருக்குற எல்லாரும் சொல்றாங்க. நல்ல பேமிலி படத்துல நடி'ன்னு. என்னை வச்சிப் பண்ணலாமே'ன்னாரு. அப்போ சின்னதம்பி படம் வந்த நேரம்.

குஷ்பு கூட நடிச்சி சில படங்கள் ஓடிருக்கு. ஒரு படம் பண்ணலாம்னு பிளான் ஆச்சு. அட்வான்ஸ் 5 லட்சம் கொடுத்தாங்க. ஒரு கதை சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. சரி. ஒருநாள் எங்க வீட்டுக்கு விருந்துக்கு வான்னாரு. அப்போ சிவாஜி படம்தான் பார்ப்பேன். நான் கல்யாணம் ஆன பிறகு மாமனார் திமுக. எம்ஜிஆர் படம்தான் பார்ப்பாரு. சரி சார் வரேன்னு சொன்னேன்.

சிவாஜியைப் பார்த்தேன்: வீட்டுல பின்னாடி வழியா கூட்டிட்டுப் போனாரு. 'ஏன்'னு கேட்டேன். 'அங்க அப்பா இருப்பாரு'ன்னு சொன்னாரு. 'அவரைப் பார்க்கறதுக்குத்தான் நான் வர்றேன்'னு சொன்னேன். அப்புறம் முன்னாடி போனோம். சிவாஜியைப் பார்த்ததும் 'என்னப்பா'ன்னு கேட்டார். 'இல்ல சார் பிரபுவை வச்சிப் படம் பண்ணலாம்னு இருக்கேன்'னு சொன்னேன். பிரபு சுமாரா நடிப்பான். 'நான் ரொம்ப நல்லா நடிப்பேன்.

பிரபு மனைவி: நீ என்னை வச்சி படம் பண்ணலாமே'ன்னு சொன்னாரு. 'சரி போ. பிரபு நடிப்பான். நடிக்கிற மாதிரி நடிப்பான்'னு சொல்லி கிண்டல் பண்ணினாரு. பிரபு அம்மா என்னை வந்து பார்த்தாங்க. அப்போ சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். பிரபு மனைவி சொன்னாங்க. நான்தான் சார் பேமிலி படத்துல நடிக்க சொன்னேன்னாரு.


அப்புறம் பிரபு வெளியே போறாரு. எங்கிட்ட நைசா சொன்னாங்க. யாரு சார் ஹீரோயின். குஷ்புன்னு சொன்னதும், 'இல்ல வேணாமே. வேற யாரையாவது ஹீரோயினா போடலாமே. ஏற்கனவே அரசல்புரசலா பேசுறாங்க. படத்து பேரு நம்ம வீட்டு கல்யாணம்.

பர்சனல் லைப்: ரெண்டு பேரும் சூட்டிங்ஸ்பாட்ல கல்யாணம் பண்ணப் போறதா பேசுறாங்க. அது உங்க படமா ஆகிடக்கூடாது'ன்னு சொல்றாங்க. அப்புறம் பிரபுகிட்ட குஷ்புவை மாற்றணும்னு சொன்னேன். 'என்ன...'ன்னு கேட்டாரு. 'எதுக்கு தேவையில்லாம'ன்னு சொன்னேன். இது 'சினிமா தானே'ன்னாரு. 'இல்ல சார். பர்சனல் லைப்ல மாறிடக்கூடாது'ன்னு சொன்னேன். அப்புறம் அவருக்கு மாத்துறதுக்கு விருப்பமில்லை.

படம் டிராப்: அதான் சார் என் முடிவுன்னு அட்வான்ஸ திருப்பிக் கொடுத்துட்டு வந்தேன். நம்மால அது நின்னுச்சுன்னு சொல்ல முடியாது. வேற சலசலப்பு வந்து படம் டிராப் ஆச்சு. அதே நேரம் குஷ்பு 'யாராவது ஏதாவது சொல்லிருப்பாங்க. அப்படி எல்லாம் இல்ல. எனக்கு சுந்தர்.சியோடு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு. ஆனா உங்க படத்துல நான் நடிக்கணும்'னு சொன்னார். அதே மாதிரி விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை படங்கள்ல அவரையே நடிக்க வச்சேன் என்றார் இயக்குனர் வி.சேகர். 

Tags:    

Similar News