ஒரே நாளில் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு படங்கள்... கலெக்ஷன்ல முந்தியது அவரா?!
80 மற்றும் 90 காலகட்டங்களில் தமிழ்சினிமா உலகம் ஆரோக்கியமாக இருந்தது. அப்போது இன்னைக்கு மாதிரி டிவி சானல்கள் கிடையாது. மக்களின் பொழுதுபோக்குன்னா பெரும்பாலும் தியேட்டர்கள்தான். எந்த ப் படம் ரிலீஸ் ஆனாலும் போய் பார்க்கப் போயிடுவாங்க. திருட்டு விசிடி கிடையாது. அதனால எல்லாப் படங்களுக்கும் நல்ல கலெக்ஷன் கிடைச்சது.
படங்களில் கதையும் வித்தியாசமாக இருந்தது. குடும்பப்பாங்கான கதையும் வந்து வெற்றி பெற்றது. கமர்ஷியல் படங்களும் ஹிட் அடித்தன. ரஜினி, கமல் கோலூச்சிய அந்தக் காலகட்டத்திலும் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, மோகன், கார்த்திக், ராமராஜன்னு எல்லா நடிகர்களின் படங்களும் ஹிட் ஆனது. அவை ரஜினி, கமலின் படங்களுக்கே சில சமயம் டஃப் கொடுத்தது என்றே சொல்லலாம். அந்த வகையில் ஒரு சுவாரசியமான நிகழ்வைப் பார்க்கலாம்.
1992 தீபாவளிக்கு கமல், சிவாஜி நடித்த தேவர் மகன், ரஜினிக்கு பாண்டியன், சத்யராஜிக்கு திருமதி பழனிச்சாமி, பிரபுவுக்கு செந்தமிழ்ப்பாட்டு படங்கள் ரிலீஸ். இதுல யாரு வின்னர்னு கேள்வி கேட்ட போது பிரபல திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
இந்த நாலு படமும் சூப்பர் டூப்பர் ஹிட். இன்னும் சொல்லப்போனா இந்த நாலு படத்திலும் திருமதி பழனிச்சாமி தான் பெரிய ஹிட். பட்ஜெட் ரொம்ப கம்மி. ஆர்.சுந்தரராஜன் டைரக்டர்.
தியேட்டர்களைப் பொருத்தவரையில் வசூல் ரீதியா திருமதி பழனிச்சாமி பெரிய ஹிட்டா இருந்தது. செந்தமிழ்ப்பாட்டும் அதே மாதிரி தான். சின்னதம்பிக்கு அப்புறம் வந்தது. அந்த வருஷத்துல இந்த நாலு படங்களும் பெரிய அளவில் வசூல் பண்ணிச்சு என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
தேவர் மகன் படத்தை பரதனும், பாண்டியன் படத்தை எஸ்.பி.முத்துராமனும் , திருமதி பழனிச்சாமி படத்தை ஆர்.சுந்தரராஜனும், செந்தமிழ்ப்பாட்டு படத்தை பி.வாசுவும் இயக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.