‘மகளிர் மட்டும்’ படத்தில் ரோகினி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகை.. வெர்ஷடைல் நாயகியாச்சே

By :  Rohini
Update:2025-02-28 13:54 IST

மகளிர் மட்டும்: 1994 ஆம் ஆண்டு சிங்கீத சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மகளிர் மட்டும். இந்த படத்தில் ரேவதி, ஊர்வசி, ரோகினி, நாசர் ,கமல் என பலர் நடித்து வெளியான ஒரு நகைச்சுவை திரைப்படம். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்த திரைப்படம். இன்றளவும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வருகிறது.

கமல் திட்டம்: முழுக்க முழுக்க காமெடியை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாக இருப்பதனால் இன்றுவரை இதை பார்த்து சிரிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். இந்த படத்தை பற்றி நடிகை ரோகினி ஒரு பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த படத்தின் போது தான் கமல் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் திட்டத்தில் இருந்தாராம் .அந்த நேரத்தில் ரோகினியும் பொன்னியின் செல்வன் நாவலை முழுமையாக படித்து முடித்து விட்டாராம்.

பூங்குழலியாக ரோகினி: அந்த நாவலில் பூங்குழலி கதாபாத்திரம் அவரை மிகவும் ஈர்த்து இருக்கிறது. அதனால் கமல் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க திட்டமிடுகிறார் என தெரிந்து கொண்ட ரோகினி கமலை சந்தித்து பேச வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். தயாரிப்பாளர் தேனப்பனிடம் கமலை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் என்றும் கேட்டிருக்கிறார். அதன்படி கமலை சந்தித்தாராம் ரோகிணி.

சரிதா நடிக்க வேண்டியது: அப்போது நேரடியாக வாய்ப்பு கேட்காமல் நீங்கள் எடுக்கப் போகும் பொன்னியின் செல்வன் படத்தில் நான்தான் பூங்குழலி என நேரடியாகவே சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டதும் கமல் சிரித்து விட்டாராம். அதன் பிறகு ராஜ்கமல் நிறுவனத்தில் இருந்து ரோகினிக்கு தொலைபேசி வர மகளிர் மட்டும் என்ற படத்தை எடுக்கப் போகிறோம். அதில் ஒரு கேரக்டரில் நீங்க தான் நடிக்க போகிறீர்கள் எனக் கூறியிருக்கிறார்கள். ஆனால் ரோகிணி நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது சரிதா. ஆனால் அந்த கேரக்டருக்கு கொஞ்சம் இளமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துதான் சரிதா அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

அப்படி சரிதா போன்ற ஒரு வெர்ஷடைல் நடிகை நடிக்கக்கூடிய கேரக்டர். அதனால் சரிதாவுக்கு பிறகு நீங்கள் சரியாக இருப்பீர்கள் என நினைத்துதான் உங்களை தொடர்பு கொள்கிறோம் என ரோகிணியிடம் கூறி இருக்கிறார்கள். அதன் பிறகுதான் ரோகினி அந்த கேரக்டரில் நடித்தாராம். இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது கமல் ரோகினியை பார்த்து குணா படத்தில் எப்படி ஒரு கருப்பு மேக்கப் போட்டு நடித்தேனோ அதைப் போல இந்த படத்தில் நீங்கள் போட வேண்டும் என சொல்லி இருக்கிறார்.


அவரும் சரி எனப் போக திரும்ப ரோகிணியை அழைத்த கமல் நீங்கள் ஒன்றும் ஸ்ரீதேவி கிடையாது என சொன்னாராம். உடனே ரோகினி நான் எப்பொழுதும் ரோகிணியாக தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என அவருடைய முகத்துக்கு எதிராகவே சொல்லிவிட்டு வந்து விட்டாராம். இதை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் ரோகினி.

Tags:    

Similar News