ரஜினி ரிஜக்ட் செய்த பாடல்.. அதுவே பின்னாடி மிகப்பெரிய ஹிட்! என்ன பாடல் தெரியுமா?

By :  Rohini
Update: 2024-12-25 12:56 GMT

rajini

ரஜினி:

ரஜினி நடித்த ஒரு படத்தின் பாடல் ரெக்கார்டு செய்யப்பட்டு அதை படமாக்க வேண்டாம். கேசட்டிலேயே ரிலீஸ் பண்ணி விடலாம் என ரஜினி சொல்ல அதை எப்படியாவது படமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இயக்குனர் செய்த சம்பவம் பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம். தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருப்பவர் ரஜினி. தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளில் எத்தனையோ சூப்பர் ஸ்டார்கள் இருந்தும் இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த்.

இவருடைய ஆரம்ப கால படங்கள் வளரும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாகும் என்றே சொல்லலாம். எத்தனையோ வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்கள் ,விதவிதமான கேரக்டர்கள், இவருடைய ஸ்டைல், இவருடைய ஆளுமை என இவரைப் பற்றி தெரிந்து கொள்வது அனைவருக்கும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும். வில்லனாக நடிக்க ஆரம்பித்து துணை நடிகராக கதாநாயகனாக ஹீரோவாக நடிகராக என மிகப் பெரிய உச்சத்தை இன்று அடைந்திருக்கிறார் ரஜினி.

50வது பொன்விழா ஆண்டு:

அடுத்த வருடம் தனது 50 வது பொன்விழா ஆண்டை கொண்டாட இருக்கிறார். இந்த சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் கடந்த நிலையில் இவர் ஒரு பிலாசஃபி என்று சொல்லலாம். இந்த வயதிலும் வேகம் குறையாத அவருடைய நடிப்பு, ஸ்டைல் என அனைவரையும் இன்றுவரை ஆச்சரியப்படுத்தி வருகிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ரஜினியை பற்றி ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார் ரஜினியின் கரியரில் டாப் 10 படங்களை எடுக்க பார்க்கும் பொழுது அதில் நிச்சயமாக பாட்ஷா படத்திற்கு என ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்யும்.

அந்தப் படத்தை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. அதில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். தேவா இசையில் வெளியான எல்லா பாடல்களும் இன்று வரை ரசிகர்களின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலாகவே திகழ்ந்திருக்கின்றன. இந்த நிலையில் பாட்ஷா படத்தில் கடைசியாக ரெக்கார்ட் செய்யப்பட்ட பாடல் நீ நடந்தால் நடை அழகு என்ற பாடல் ஆகும். அந்தப் பாடலை தேவா ரெக்கார்டு செய்ய அது ரஜினிக்கு மிகவும் பிடித்திருக்கிறது .ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் போட்டு இருக்கிறார் .

வேண்டவே வேண்டாம் என ரஜினி:

படத்தில் நிறைய பாடல்கள் இருக்கின்றது. இதற்கு இடையில் இந்த பாடலை எப்படி சேர்ப்பது. அதுவும் டூயட் பாடல். சரிவராது. அதனால் இதை கேசட்டாகவே நாம் பதிவு செய்து விடலாம் என சொல்ல அதற்கு தேவா கொஞ்சம் வருந்தியதாக தெரிகிறது. இருந்தாலும் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அந்த பாடலைக் கேட்ட பிறகு இதை எப்படியாவது படமாக்கி விடணும் ,படத்தில் எப்படியாவது சேர்த்து விட வேண்டும் என்ற யோசனையில் இருந்திருக்கிறார்.

மறுநாள் படப்பிடிப்பிற்கு செல்ல ஒரு இடைவெளியில் ரஜினி பேசிக் கொண்டிருந்தாராம். சுரேஷ் கிருஷ்ணா அந்தப் பக்கமும் இந்த பக்கமும் நடந்து கொண்டே இருந்தாராம். அப்பொழுதே ரஜினிக்கு புரிந்து விட்டது இந்த பாடலை பற்றி தான் யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று. உடனே சுரேஷ் கிருஷ்ணா ரஜினியிடம் வர, உடனே இந்த ரஜினி அந்த பாடலை பற்றி மட்டும் பேசாதீர்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.


இருந்தாலும் சுரேஷ் கிருஷ்ணா அந்த பாடலுக்கான காட்சியை சொல்ல சொல்ல ரஜினிக்கு ஆர்வம் அதிகமாகி அவரும் இந்த கெட்டப்பில் வரலாம் அந்த கெட்டப்பில் வரலாம் என அடுத்தடுத்து ரஜினியை சொல்ல ஆரம்பித்து விட்டாராம். அதன் பிறகு தான் அந்தப் பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது. அதுவே பின்னாளில் எப்பேர்ப்பட்ட வரவேற்பை பெற்றது என அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

Tags:    

Similar News