என்னை ஏன் சார் நடிக்க வச்சீங்க?!.. பாலச்சந்தரிடம் அழுது புலம்பிய ரஜினிகாந்த்!...
Rajinikanth: சென்னை நடிப்பு கல்லூரியில் படித்து வந்த ரஜினியை தனது அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க வைத்தார் பாலச்சந்தர். அதன்பின் பாலச்சந்தர் இயக்கத்தில் தொடர்ந்து நடித்தார் ரஜினி. பெரும்பாலும் அந்த படங்களில் கமல் ஹீரோவாக இருப்பார். ரஜினி அவரின் நண்பராக நடித்திருப்பார்.
குரு பாலச்சந்தர்: தன்னை அறிமுகப்படுத்தியவர் மற்றும் நடிப்பை சொல்லிக்கொடுத்தவர் என்பதால் ரஜினிக்கு பாலச்சந்தர் மீது எப்போதும் மிகப்பெரிய மரியாதை உண்டு. அதனால்தான், பின்னாளில் சூப்பர்ஸ்டாராக மாறிய பின்னரும் பாலச்சந்தரின் தயாரிப்பில் பல படங்களிலும் நடித்தார். பாலச்சந்தர் ஒரு வார்த்தை சொன்னால் உடனே கட்டுப்படுவார் ரஜினி.
ரஜினியின் மதுப்பழக்கம்: 80களில் ஷூட்டிங் முடிந்தவுடன் ரஜினிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. ஒரு நாள் ஷூட்டிங் முடிந்து அறைக்கு சென்ற ரஜினி மது அருந்தியிருக்கிறார். திடீரெனெ ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என அழைப்பு வர பயந்துகொண்டே ஓடியிருக்கிறார் ரஜினி. அவர் மது அருந்தியிருப்பதை தெரிந்துகொண்ட பாலச்சந்தர் செம டோஸ் வீட்டிருக்கிறார். அதோடு சரி. ஷூட்டிங் முடிந்தபின்னர் மது அருந்தும் பழக்கத்தை விட்டுவிட்டார் ரஜினி.
சினிமாவை விட்டு விலக முடிவு: ரஜினி பல தவறான முடிவுகளை எடுத்தபோதெல்லாம் அதை தடுத்தவர் பாலச்சந்தர்தான். சினிமாவில் பீக்கில் இருக்கும்போதே அதை விட்டுவிட்டு ஆன்மிகத்தில் பயணிப்பது என ரஜினி முடிவெடுக்க அதை பாலச்சந்தர் தடுத்தார். ஒருமுறை லதாவுடன் பிரச்சனை ஏற்பட்டு அவரை விட்டு ரஜினி விலக முடிவெடுத்தபோதும் அதை தடுத்தவர் பாலச்சந்தர் என்றும் ஒரு செய்தி உண்டு.
1975ம் வருடம் சினிமாவில் அறிமுகமான ரஜினி 1978ம் வருடம் 20 படங்களில் நடித்தார். அவை பெரும்பாலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்கள். சரியாக தூங்காமல் இரவு, பகலாக நடித்ததில் அவரின் உடலிலும், மனநிலையிலும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால், விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் சண்டை போடுவது என பல விஷயங்களை ரஜினி செய்தார்.
அழுது புலம்பிய ரஜினி: ரஜினியை பற்றி தினமும் ஒரு தவறான செய்தியை கேள்விப்பட்ட பாலச்சந்தர். ரஜினியை சந்தித்து பேச அவரின் வீட்டிற்கு போனார். அப்போது ‘என்னை ஏன் சார் நடிக்க வச்சி நடிகனாக்குனீங்க?’ என அழுது புலம்பி இருக்கிறார் ரஜினி. ‘தொடர்ந்து நடிக்காதே. ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு ஒரு வாரம் ஓய்வு எடு. எல்லாம் சரி ஆகிவிடும்’ என சொல்லி சமாதனம் செய்தார் பாலச்சந்தர்.
ரஜினியோ ‘படுத்தால் தூக்கமே வரமாட்டேங்குது சார்.. மன உளைச்சலா இருக்கு’ என சொல்ல, ‘அப்படி எனில் நான் ஒரு மருத்துவர் சொல்கிறேன். அவரிடம் சென்று சிகிச்சை எடு. ஒரு வாரம் அங்கு தங்கு’ என சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்தார் பாலச்சந்தர். ஆனாலும் அங்கு 3 நாட்கள் மட்டுமே இருந்தார் ரஜினி. கொஞ்சம் கொஞ்சமாக மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு ரஜினி இயல்பு நிலைக்கு திரும்பினார்.