வடிவேலு என் வாழ்க்கையையே கெடுத்துட்டான்!.. புலம்பும் பிரபல காமெடி நடிகர்!...

By :  MURUGAN
Update: 2025-05-10 05:23 GMT

நடிகர் ராஜ்கிரணின் அலுவலகத்தில் 4 வருடங்கள் தங்கியிருந்து சினிமாவில் வாய்ப்பு தேடியவர்தான் வடிவேலு. ஒரு விழாவுக்காக ராஜ்கிரண் மதுரை வர அவரை நேரத்தை போக்க அவர் தங்கியிருந்த அறைக்கு நண்பர் மூலம் போனவர்தான் வடிவேலு. பாட்டு பாடி, நடனமாடி ராஜ்கிரணை வடிவேலு சந்தோஷப்படுத்த அவரை ராஜ்கிரணுக்கு பிடித்துப்போய்விட்டது.

எனவே, அவரை சென்னை வரவழைத்து தன்னுடைய அலுவலகத்தில் தங்க இடம் கொடுத்ததோடு, தான் தயாரித்து நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் சில காமெடி காட்சிகளில் நடிக்கவும் வாய்ப்பும் கொடுத்தார். அதன்பின் சிங்காரவேலன், சின்னக்கவுண்டர், தேவர் மகன் உள்ளிட்ட பல படங்களிலும் நடிக்க வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைத்தது.



பல படங்களிலும் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவராக மாறினார். ஃபிரண்ட்ஸ், வின்னர், தலைநகரம் உள்ளிட்ட பல படங்களிலும் இவரின் காமெடி ஹைலைட்டாக இருந்தது. வடிவேலு கஷ்டப்பட்ட போது அவருக்கு ராஜ்கிரண் மட்டுமல்ல. பலரும் உதவியிருக்கிறார்கள்.

சினிமாவில் மற்றவர்கள் உதவியில்லாமல் வாய்ப்பை வாங்கவே முடியாது. வடிவேலுவுக்கு பலரும் உதவியிருக்கிறார்கள். ஆனால், வடிவேலு யாருக்கும் உதவியதில்லை என்பதே நிஜம். அதேபோல், தனக்கு உதவியர்கள் பற்றி அவர் எப்போதும் நினைத்து பார்த்ததும் இல்லை. தான் மேலே வந்தபின் தனது படங்களில் அவர்களுக்கு அவர் வாய்ப்பும் கொடுத்தது இல்லை. அப்படியே ஒதுக்கிவிடுவார்.

இந்த தகவலை அவருடன் காமெடி காட்சிகளில் நடித்த பலரும் பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள். சினிமா வாய்ப்பு மட்டுமில்லை. வடிவேலுடன் பல படங்களில் நடித்த போண்டா மணி, பாவா லட்சுமணன், அல்வா வாசு போன்றவர்கள் நோய்வாய் பட்டபோது அவர்களுக்கு வடிவேலு எந்த உதவியும் செய்யவில்லை. இதுவும் விமர்சனத்துக்குள்ளானது.


90களில் ரசிகர்களிடம் பிரபலமானவர் சிசர் மனோகர். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் அங்கீகரிக்கப்படாத நடிகர்களில் இவரும் ஒருவர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு,ம் விவேக் என பலருடனும் நடித்திருக்கிறார். 1979ம் வருடம் சினிமாவில் புரடெக்‌ஷன் உதவியாளராக தனது வாழ்க்கையை துவங்கியவர். என் ராசாவின் மனசிலே படத்தில்தான் இவரும் அறிமுகமானார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் அளித்தபேட்டியில் ‘நான் ராஜ்கிரணின் தயாரிப்பு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது வடிவேலு என்னிடம்தான் வேலை பார்த்து கொண்டிருந்தார். நானும், வடிவேலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறோம். ஆனால், வளர துவங்கியதும் வடிவேலு என்னுடன் நடிப்பதை தவிர்த்துவிட்டார். நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன்?. வடிவேலுக்கு நான் நிறைய உதவிகள் செய்திருக்கிறேன். அந்த நன்றியெல்லாம் அவரிடம் இல்லவே இல்லை. அதையெல்லாம் மறந்து என் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கியதில் வடிவேலுவுக்கு முக்கிய பங்குண்டு’ என புலம்பியிருக்கிறார்.

மேலும், தனக்கு கிடைக்கவிருந்த பல நல்ல வாய்ப்புகளை வடிவேலு கெடுத்துவிட்டார். அதை வேறு நடிகர்களுக்கு கொடுத்துவிட்டார் எனவும் சொல்லியிருக்கிறார்.

Tags:    

Similar News