பாடல்கள் இல்லாம வந்த முதல் படத்துக்கு இவ்வளவு சவால்களா? தயாரிப்பாளருக்கு இயக்குனர் போட்ட கண்டிஷன்

By :  Sankaran
Update: 2025-01-16 16:30 GMT

பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் முதன்முதலாக பாடல்களே இல்லாமல் வெளியான படம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

சிவாஜி படம்: பாடல்களே இல்லாம தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம்னா அது ஏவிஎம் தயாரிப்பிலும், எஸ்.பாலசந்தரின் இயக்கத்திலும் வெளியான அந்த நாள் படம் தான். இந்தப் படத்தில் கதாநாயகனாக சிவாஜி நடித்துள்ளார். அந்தப் படத்தில் பாடல்கள் வேண்டாம் என்று எஸ்.பாலசந்தர் முடிவு எடுத்துவிட்டாலும் அதை அமலுக்குக் கொண்டு வருவதற்குள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.


50 பாடல்கள்: தமிழ்சினிமாவைப் பொருத்தவரைக்கும் ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு படத்தில் 30 முதல் 40.... 50 பாடல்கள் வரை இடம்பெற்றிருந்தன. அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு படத்துக்குப் பத்துப் பாடல்கள் என்றானது. அந்த சமயத்தில்தான் பாடல்களே இல்லாமல் படம் எடுப்பது என்று முடிவு எடுத்தார் எஸ்.பாலசந்தர்.

கண்டிஷன்: ஏவி.மெய்யப்பச் செட்டியார் படத்தில் ஒரு பாடலாவது வைக்க முடியுமான்னு கேட்டார். அதற்கு ஒண்ணுன்னு வைக்க முடியாது. வைத்தால் 6 பாடல்கள் வைக்கலாம் என்றாராம் இயக்குனர். அப்படி சொன்னதற்குப் பிறகுதான் அந்தப் படத்தில் பாட்டே வேண்டாம் என்ற முடிவுக்கு ஒத்துக்கொண்டாராம் ஏவி.மெய்யப்பச் செட்டியார்.

வீணை எஸ்.பாலசந்தர் மறைந்ததும் அவரது இரங்கல் கூட்டத்தில் பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்த முக்தா சீனிவாசன் பகிர்ந்து கொண்ட தகவல்தான் இது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பன்முகத்திறன்: வீணை எஸ்.பாலசந்தரின் நிஜப்பெயர் சுந்தரம் பாலசந்தர். இவர் வீணை கலைஞர், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவர். வீணை மட்டும் இல்லாமல் தபேலா, மிருதங்கம், ஆர்மோனியம், சித்தார், செனாய், புல்புல்தாரா, தில்ரூபா என பல்வேறு இசைக்கருவிகளை யாருடைய துணையும் இன்றி கற்றுக் கொண்டார்.

அந்த நாள்: எம்.கே.தியாகராஜ பாகவதருடன் இணைந்து நடித்துள்ளார். சீதா கல்யாணம், என் கணவர் படங்களில் நடித்துள்ளார். அந்த நாள் படத்தை இயக்கியுள்ளார். 1954ல் இவரது இயக்கத்தில் வெளியான படம் அந்தநாள். ஜாவர் சீதாராமனின் கதை. சிவாஜி, பண்டரிபாய் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சிவாஜி ஆன்ட்டி ஹீரோவாக நடித்துள்ளார். 

Tags:    

Similar News