சான்ஸ் கொடுத்த அப்பாவையே இளையராஜா திட்டிட்டாரு... டிஎம்எஸ் மகள் சொன்ன ஷாக் நியூஸ்!...

By :  Sankaran
Update:2025-03-14 08:09 IST

பிரபல பின்னணிப் பாடகர் டிஎம்.சௌந்தரராஜன் இளையராஜாவுக்கு கொடுத்த வாய்ப்புகள், பின்னாளில் இளையராஜாவுக்கும் அவருக்கும் நடந்த சண்டை என பல்வேறு விஷயங்களை டிஎம்எஸ்.மகள் மல்லிகா தெரிவித்துள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.

அப்பா இளையராஜாவை அடிக்கடி பாராட்டுவாரு. அந்தப் பையன்கிட்ட நல்ல திறமை இருக்குன்னு சொல்வாரு. இங்க வந்து இளையராஜா கித்தார், கீபோர்டு எல்லாம் வாசிச்சிக்கிட்டு இருப்பாரு. அதே மாதிரி இங்க வந்து சான்ஸ் கேட்டு இளையராஜா எல்லாம்  நிப்பாங்க. அப்படி சான்ஸ் கேட்ட இளையராஜா எங்க அப்பாவை ஒருமுறை திட்டி விட்டுட்டாரு. ஏதோ சொல்லி சண்டை போட்டுட்டாரு. 'இனிமே எல்லாம் சான்ஸ் கொடுக்க முடியாது'ன்னு சொல்லிருக்காரு.


எம்எஸ்.விஸ்வநாதன் சாருக்கிட்ட சொன்ன மாதிரி 'இப்படி எல்லாம் பண்ணினா நல்லாருக்கும்பா'ன்னு இளையராஜா கிட்ட அப்பா சொல்லிருக்காரு. அதுக்கு 'இங்க நான்தான் மியூசிக் டைரக்டர். நான் சொல்ற மாதிரிதான் நீங்க பாடணும். அங்க பாடுனேன். இங்கே பாடுனேன்கறத எல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன். நான் என்ன சொல்றேனோ அதைத்தான் நீங்க பாடணும்'னு கடுமையா திட்டிட்டாரு.

உடனே அப்பாவும் 'சரி'ன்னாரு. அதுக்கு அப்புறம் அப்பா பாடவே இல்லை. அவரும் அதுக்கு அப்புறம் ரெக்கார்டிங்குக்கு எல்லாம் கூப்பிடவே இல்லை. எங்க அப்பாவே, 'நான் நல்லா பாடவே இல்லை. என்னை  விட்டுருப்பா'ன்னு இளையராஜாகிட்டயே சொல்லிட்டாரு.

அதுக்கு அப்புறம் பார்க்கும்போது எல்லாம் 'ஆகா, ஓகோ'ன்னு பேசுவாரு. பின்னாடி எப்படியோ தெரியாது. ஆனா எங்க அப்பா எப்பவுமே சொல்வாங்க. நல்லா வருவான் அவன். நல்லா பாடுவான். என்னமோ போதாத நேரம். அவ்ளோதான்னாரு.

எங்க அப்பாவுக்குக் கை நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. சுகர் இருக்குறதால ரொம்ப ஹைபிட்ச்ல பாடிப் பாடி காது கேட்காமப் போயிடுச்சு. அந்த நேரம்தான் இளையராஜாவோட சண்டை எல்லாம் வந்தது. அப்புறமா மெஷின் வச்சிக்கிட்டாரு என்கிறார் மல்லிகா.

டிஎம்ஸ்சுக்கு காது கேட்காத நேரம் பார்த்தா இளையராஜா திட்டுவாரு? இதெல்லாம் ஓவரா இல்ல. அதிலும் அவருக்கிட்ட போய் சான்ஸ் கேட்டுருக்காரு. இளையராஜாவுக்கு இப்போ கர்வம் இருக்குன்னு சொல்றதை நியாயம்னு சொல்றாங்க. ஆனா அப்பவே இருந்துருக்கே. இதுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல என்பதுதான் நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.

Tags:    

Similar News