ஹீரோவின் முதல் சாய்ஸ்… சொந்த வாழ்க்கை… கோ படத்தில் நீங்கள் அறிந்திராத சூப்பர் தகவல்கள்…
Ko: தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே பல ஆண்டுகள் கழித்தும் அதே புகழை தக்க வைத்துக்கொள்ளும் அந்த வகையில் ஜீவா நடிப்பில் உருவான கோ படம் இன்றளவும் நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது. அப்படத்தில் நீங்க அறிந்திராத ஆச்சரிய தகவல் அடங்கிய தொகுப்புகள்.
2011ம் ஆண்டு கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவான கோ திரைப்படம் பத்திரிக்கை புகைப்பட கலைஞரான அஷ்வினை சுற்றி உருவாக்கப்பட்டு இருந்தது. ஜீவா, கார்த்திகா, அஜ்மல், பியா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
பல முன்னணி பத்திரிக்கையில் பகுதிநேர போட்டோகிராபராக வேலை செய்து வந்தவர் கே.வி.ஆனந்த். இருந்தாலும் செய்தித்துறை புதுசு என்பதால் இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிக்காக பெங்களூரு டெக்கான் ஹெரால்ட் அலுவலகத்தில் தங்கி சில தகவல்களை சேகரித்தார்.
அதை தொடர்ந்து இரட்டை திரைக்கதை எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து மொத்த கதையை உருவாக்க ஆறு மாதம் எடுத்ததாம். முதலில் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கப் போறதாக அறிவிப்பு வெளியானது. ஆனா திடீரென அவர்கள் சில காரணங்கள் விலகிவிட்டனர்.
இப்படத்தின் கதையை கே.வி ஆனந்த் எழுதிய பின்னர் முதலில் கதை சொன்னது அஜித்திடம் தானாம். அவர் கால்ஷீட் கிடைக்காமல் போக கார்த்தியிடம் கதை சொல்லி அதுவும் நடக்காமல் போன பின்னரே சிம்புவிடம் கதை சென்றதாம்.
அவருக்கு கதை ரொம்பவே பிடித்து விட உடனே ஓகே சொல்லி விட்டார். ஹீரோயினாக கார்த்திகா நாயரை அழைத்து வந்தார். அவர் அந்த சமயத்தில் ஏற்கனவே ஒரு தெலுங்கு படம் நடித்து வரவேற்பை பெற்று இருந்தார். ஆனால் கார்த்திகா உள்ளே வந்து போட்டோஷூட் முடித்த சில நாட்களிலேயே சிம்பு படத்தில் இருந்து வெளியேறினார்.
இதற்கு காரணம் படத்தின் ஹீரோயினாக கார்த்திகா வேண்டாம். தமன்னாவை ஒப்பந்தம் செய்ய சிம்பு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்போது தமன்னாவின் சம்பளம் பெரிய அளவு இருந்ததாம். அதனால் தயாரிப்பு தரப்பு மறுப்பு தெரிவிக்கவே சிம்பு விலகியதாகவும் தகவல்கள் இருக்கிறது.
இதை தொடர்ந்தே அப்போது தொடர் ஹிட்களை கொடுத்து வந்த ஜீவா படத்திற்குள் வந்தார். 14 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் 30 கோடி வரை வசூல் செய்து 100 நாட்களுக்கும் அதிகமாக திரையரங்கில் ஓடி சாதனை செய்தது. சூர்யா, கார்த்தி உள்ளிட்ட டாப் கோலிவுட் பிரபலங்கள் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து ஆச்சரியப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.