அந்தப் படத்தின் கதையை உல்டா பண்ணி எடுத்ததுதான் வான்மதி படமா.. இவ்ளோ விஷயம் இருக்கா?

By :  Rohini
Update:2025-02-26 18:42 IST

காதல் கோட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக மாறியவர் இயக்குனர் அகத்தியன். இந்தப் படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதன் மூலம் முதன் முதலில் ஒரு இயக்குனருக்கு தேசிய விருது கிடைத்தது இவருக்குத்தான்.காதல் கோட்டை படத்திற்கு முன்பாகவே அஜித்தை வைத்து வான்மதி என்ற படத்தை இயக்கியவரும் அகத்தியன் தான்.

வான்மதி படம் எப்படி உருவானது என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் அகத்தியன். ஒரு தயாரிப்பாளரிடம் கோகுலத்தின் சீதை கதையை எடுத்துக் கொண்டு போயிருக்கிறார் அகத்தியன். ஆனால் அந்த தயாரிப்பாளர் இதை விக்ரமன் பண்ணட்டும். நீங்கள் வேறு ஏதாவது ஒரு ஜாலியா இளைஞர்களுக்கான படமாக கொடுங்கள் என்று கேட்டாராம்.

உடனே அகத்தியன் எனக்கு ஜாலியா எல்லாம் படம் பண்ண தெரியாது என்று சொல்லியிருக்கிறார். இருந்தாலும் மூன்று பெண்குழந்தைகள் இவர்களை வைத்து தன் குடும்பத்தையும் சர்வே பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ஓகே பண்ணிவிடலாம் என முடிவெடுத்து மதுமதி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் அந்தப் படத்தை இன்னும் பார்த்தாலும் அகத்தியனுக்கு சிரிப்புதான் வருமாம்.

அந்தளவுக்கு எவ்வளவுக்கு இறங்கி கூத்தடிக்கணுமோ அப்படி இளசுகளுக்கான படமாக எடுத்திருக்கிறார். அவ்வளவு அபத்தமாக இருந்ததாம். இந்தப் படத்தை பற்றி ஒரு வாரப்பத்திரிக்கையிலும் மது இருக்கும் இடத்தில் மதி இல்லை என்று எழுதியிருந்தார்களாம். ஆனால் இது உண்மையான விஷயம் தான். ஏனெனில் படத்தில் ஒரு சின்ன அறிவு கூட இருக்காது என அகத்தியன் கூறினார்.

ஆனால் படம் 140 நாள்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. அதிலிருந்து பார்க்கிறவர்கள் எல்லாருமே மதுமதி மாதிரி படம் கொடுங்கள் என கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம். இப்படியே ஒரு இரண்டு வருடம் போக சிவசக்தி பாண்டியன் அகத்தியனை வைத்து ஒரு படம் பண்ணலாம் என முடிவெடுத்தாராம். அப்போது அகத்தியன் சிவசக்தி பாண்டியனிடம் வித்தியாசமான காதல் கதை என சொல்லி காதல் கோட்டை படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தாராம்.

அதற்கு சிவசக்தி பாண்டியன் வித்தியாசமான கதை எல்லாம் வேண்டாம். மதுமதி மாதிரி ஒரு கதை இருந்தால் சொல்லுங்க என்று கேட்க உடனே அகத்தியன் மதுமதி கதையையே உல்டா செய்து வான்மதி கதையாக சொல்லியிருக்கிறார். கதை எல்லாம் ஒன்றுதானாம். மதுமதி படத்திலும் தங்கர் பச்சான் தான் கேமிராமேன். வான்மதி படத்திலும் தங்கர் பச்சான் தான் கேமிரா மேன். உடனே தங்கர் பச்சான் இந்த கதையைத்தான் நாம் ஏற்கனவே பண்ணிவிட்டோமே என சொல்ல சும்மா இரு. பார்த்துக்கலாம் என வான்மதி படத்தை அகத்தியன் எடுத்து கொடுத்தாராம். 

Tags:    

Similar News