ஏற்கனவே ஹிட்டான பாடல்.. அதே மாதிரிதான் வேணும்.. இளையராஜாவிடம் அடம்பிடித்த விக்ரமன்

By :  Rohini
Update:2025-02-26 19:23 IST

தமிழ் சினிமாவில் பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் விக்ரமன். இவர் பல இயக்குனர்களை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இயக்குனர் அகத்தியன் இவரிடம்தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். படங்களில் செண்டிமெண்ட் கலந்து எதார்த்தத்திற்கு என்ன தேவையோ அதை படத்தில் வைத்து குடும்ப ஆடியன்ஸ்களை தன் பக்கம் இழுத்தவர்.

விஜய்க்கு ஒரு டர்னிங் பாயிண்டை ஏற்படுத்திக் கொடுத்தவர் விக்ரமன் தான். பூவே உனக்காக படம் விஜயின் கெரியரில் பெரிய அளவில் பேசப்படும் படமாக மாறியது. விஜயின் 10 நல்ல படங்களை எடுத்துக் கொண்டால் அதில் கண்டிப்பாக பூவே உனக்காக படம் இடம்பெறும். அப்படி அஜித், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுக்கு தரமான படங்களை கொடுத்திருக்கிறார் விக்ரமன்.

1993 ஆம் ஆண்டில் கார்த்திக்கை வைத்து இனி எல்லாம் சுகமே என்ற படத்தை எடுக்க நினைத்தாராம் விக்ரமன். அந்தப் படத்தில் இளையராஜாவை இசையமைக்க நினைத்து இளையராஜாவிடம் படத்தின் கதையையும் சொல்லியிருக்கிறார். நிறம் மாறாத பூக்கள் படத்தில் வரும் ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற பாடல் இருக்கிறது. இப்போது வரை அந்த பாடலுக்கு என தனி மவுசு இருக்கிறது.

அதே மாதிரியான ஒரு பாடல்தான் வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஸ்ரீலங்காவில்தான் படமாக்கப் போகிறேன். அப்படி ஒரு சூழலில் ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடல் மாதிரி வேண்டும் என கேட்டிருக்கிறார் விக்ரமன். உடனே இளையராஜா ‘ நல்ல டேஸ்ட். நிறம் மாறாத பூக்கள் படத்தில் அமைந்த அந்த பாடலையும் பாரதிராஜா ஸ்ரீலங்காவில்தான் எடுக்க நினைத்தார். ஆனால் முடியாமல் கொடைக்கானலில் எடுத்தார்’

அதே மாதிரி நீயும் இப்படி ஒரு பாடலை ஸ்ரீலங்காவில் எடுக்க நினைத்திருக்க. நல்ல டேஸ்ட் என சொல்லி ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடலை விட 100 மடங்கு நல்ல பாடலாக கொடுத்தாராம். ஆனால் அந்த பாடலை படமாக்க முடியவில்லை. படமும் டிராப் ஆகிவிட்டதாக விக்ரமன் கூறினார்.

Tags:    

Similar News