ஷோபனாவிற்கு பாட சான்ஸ் கொடுக்க மறுத்த இயக்குனர்கள்! இதுதான் காரணமா?
விஜய்:
இன்று தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் ஆளுமையாக இருக்கும் நடிகர் விஜய். இவர் கடந்து வந்த பாதைகளை பார்க்கும் போது போராடும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நம்மை விமர்சனம் செய்கிறவர்கள், உருவ கேலி பண்ணுகிறவர்களுக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை விஜயின் வளர்ச்சியை பார்க்கும் போதே தெரிந்து கொள்ள முடியும்.
இப்போது அரசியலுக்கும் வந்த காரணம் இதுதான். ஒரு காலத்தில் தன் படங்களுக்கு அரசியல் சார்ந்த பிரச்சினைகள் வருகிறது என்பதை புரிந்து கொண்ட விஜய் அந்த அரசியலிலும் தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என இன்று பல அரசியல் தலைவர்களுக்கு தலைவலியாக மாறியிருக்கிறார் விஜய். ஒவ்வொருவரும் இவரின் வருகையை பார்த்து பயந்துதான் போயிருக்கிறார்கள்.
சொந்தக் குரலில் இத்தனை பாடலா?
ஆரம்பத்தில் பெற்றோர்களின் கண்டிப்பில் வளர்ந்த மகனாக இருந்த விஜய் ஒரு கட்டத்திற்கு பிறகு தனது சொந்த முயற்சியால் ஒவ்வொரு படிகட்டாக ஏறி ஏறி இந்தளவு வளர்ச்சியை அடைந்திருக்கிறார். பெரும்பாலும் விஜயின் படங்களில் விஜய் ஒரு பாடல் கண்டிப்பாக பாடிவிடுவார். அது கோட் படம் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
அதனால் இப்போது அவர் கடைசியாக நடித்துக் கொண்டிருக்கும் 69வது படத்திலும் அவர் பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஒரு சிறந்த பாடகராவதற்கு காரணம் அவருடைய அம்மா மற்றும் மாமா சுரேந்தர். சுரேந்தரும் தாய் ஷோபனாவும் பின்னணி பாடகர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மோகனுக்கு பெரும்பாலான படங்களில் டப்பிங் கொடுத்தவரே இந்த சுரேந்தர்தான்.
தலைமுறை அப்படி:
இப்படிப்பட்ட ஜீனிலிருந்து வந்த விஜயும் பாடாமல் இருப்பாரா? ஆனால் ஷோபனாவை பொறுத்தவரைக்கும் வெளி படங்களில் பாடியதே இல்லையாம். பெரும்பாலும் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய படங்களில்தான் பாடியிருக்கிறாராம். அது ஒரு செண்டிமெண்ட் என்பதால் என் கணவர் என்னை பாட வைத்துவிடுவார். வெளி மியூஸிக் டைரக்டர் எனக்கு வாய்ப்பு கொடுக்கல.
என் கணவர் இயக்குனரானதும் ஒரு இயக்குனரின் மனைவியை எப்படி பாட வைப்பது எனக் கருதியே எனக்கு வாய்ப்பு கொடுக்கல என ஒரு பேட்டியில் ஷோபனா கூறியிருக்கிறார். ஷோபனாவும் விஜயுமே ஒரு சில பாடல்களை சேர்ந்து பாடியிருக்கின்றனர். அதில் மிகவும் பிரபலமான பாடல் தொட்டபெட்டா ரோட்டி மேல முட்ட பரோட்டா பாடல்.