கவுதம் மேனனுக்கு சம்பளம் இத்தனை கோடியா?!.. பேசாம டைரக்ஷனை விட்டு நடிகராவே மாறிடலாம்!..
கெளதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் பெரும்பாலும் வெற்றிப்படங்களாகவே அமைந்துள்ளன.
இவர் மேலும் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் போன்ற பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இப்படங்களின் மூலம் இவர் தனக்கென தனி ரசிகர்களையும் சம்பாதித்தார். கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்களை மக்கள் ரசிக்க இப்படங்களே எடுத்துகாட்டாகவும் அமைந்தன.
இதையும் வாசிங்க:சிவகார்த்திகேயன் எப்படிப்பட்டவர் தெரியுமா?.. டி. இமானை தொடர்ந்து அவரது முதல் மனைவி ஓபன் பேட்டி!..
இவர் தற்போது இயக்குனர் பணியை தவிர்த்து பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். மேலும் இவரின் இந்த நிலைமைக்கு காரணம் இவர் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படமே என சமீபத்தில் இவரே கூறியிருந்தார். இப்படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே இவர் சினிமாவிற்குள் நடிக்க வந்தாராம். இதில் வரும் வருமானத்தை கொண்டு இவர் துருவ நட்சத்திரத்தை தொடர்ந்து இயக்கியுள்ளார்.
இப்படம் வருகின்ற நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ருத்ர தாண்டவம், டான், விடுதலை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களும் இவருக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தன.
இதையும் வாசிங்க:லியோ படத்தை வெளியிட தடை!.. சோதனை மேல் சோதனை!.. கொஞ்சம் கேப் விடுங்கப்பா!…
இவர் தற்போது விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தில் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இப்படம் இன்னும் 2 நாட்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து கொண்டிருக்கும் திரைப்படத்தில் தொழிலதிபராக நடிக்கவுள்ளார்.
இவ்வாறு கல்லா கட்டும் கெளதம் வாசுதேவ மேனனுக்கு தற்போது அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இவர் தற்போது பாலிவுட்டின் பிரபல இயக்குனரான அனுராக் கெஷ்யப் இயக்கத்தில் வெளியாகும் வெப் சீரிஸில் நடிக்க உள்ளாராம். இதற்காக சம்பளமாக இவருக்கு 6 கோடி வரையிலும் கிடைக்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இயக்குனராய் இவர் சம்பாதித்ததை விட நடிகராய் அதிக அளவு கல்லா கட்டுவதாக நெட்டிசன்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இதையும் வாசிங்க:ஒன்னு கேட்டா ஒன்னு ஃப்ரீ! இமான் சிவகார்த்திகேயன் இடையே இதுதான் நடந்தது – டபுள் டிரீட் வைத்த பயில்வான்