ரஜினியுடன் இணையும் ஸ்டைலீஸ் இயக்குனர்?!.. அப்போ வேற லெவல் சம்பவம்தான் போலயே!…

by amutha raja |   ( Updated:2023-09-21 09:18:14  )
rajinikanth
X

Actor Rajinikanth:ரஜினி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர். இவர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராய் அறிமுகமானார். மேலும் மூன்று முடிச்சு, முத்து, அண்ணாமலை போன்ற திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

பின் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மிக பிரமாண்டமாய் உருவாக்கப்பட்டது. இப்படத்தினை தொடர்ந்து இவர் காலா, பேட்ட, அண்ணாத்த போன்ற திரைப்படங்களில் நடித்தார். இப்படங்கள் இவருக்கு பெரிய அளவில் வெற்றியடையவில்லை.

இதையும் வாசிங்க:பசியில் மயக்கமே வந்துட்டு!… இவங்க வண்டியில வந்து இத்தனை அசிங்கப்படணுமா?… கவுண்டமணியிடம் புலம்பிய ரஜினிகாந்த்..

பின் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் வசூலில் பெரிய அளவில் சாதனை படைத்தது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், சிவராஜ் குமார், மோகன்லால் போன்ற பல முக்கிய கதாபாத்திரங்களும் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இப்பட வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இதில் நடித்த அனைத்து பிரபலங்களும் பங்கேற்றனர். இப்படத்திற்கு பின் தற்போது ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் ராஜாவுடன் இணைந்து இவரது 170வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதையும் வாசிங்க:போதும்… போதும்.. ரொம்ப லெங்க்தா போது! ஜெய்லர் வெற்றியால் ஜெட் ஸ்பீடில் ரஜினிகாந்த்!

இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனராஜின் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர். மேலும் ரஜினிகாந்த தயாரிப்பாளர் ஐசரி கணேசின் தயாரிப்பில் படம் பண்ண போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ரஜினி நடிக்கும் இப்படத்தை மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படங்களை இயக்கிய கெளதம் வாசுதேவமேனன் இயக்க போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இதற்கான கதை இன்னும் தயாராகவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. ரஜினி தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ள நிலையில் கெளதம் வாசுதேவ மேனன் கதை தயார் செய்ய இந்த கால அவகாசம் போதுமானது. மேலும் நீண்ட நாளாய் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த இந்த காம்போ மிகப்பெரிய வெற்றியை அடையும் எனவும் நெட்டிசன்கள் மத்தியில் கருத்துகள் நிலவுகின்றன.

இதையும் வாசிங்க:இப்பதான் பணக்காரனா ஃபீல் பன்றேன்னு சொன்னதுக்கு பின்னால இவ்வளவு இருக்கா!.. அந்த சம்பவம்தான் காரணமாம்…

Next Story